திரைத்துறையில் எந்த சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றாலும் அதில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதை இயக்குநர்கள் சங்கத் தேர்தலும் நிரூபித்துவருகிறது.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தல் வரும் ஜூலை 21ஆம் தேதி நடைபெறுகிறது.
இயக்குநர் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி ,ரத்தன் கணபதி,சி.வி.வித்யாசாகர் எஸ்.பி.ஜனநாதன்,அமீர் உள்ளிட்ட 5 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இயக்குனர் சங்கத் தேர்தல் விதி எண் 20ன்படி , எஸ்.பி.ஜனநாதனுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில்நாதன் அறிவித்தார்.
இதையடுத்து தேர்தல் அதிகாரி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டி இயக்குநர் அமீர் அணி இப்போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமீர் அணியில் உள்ள, இயக்குநர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “ஜனநாதனின் கோரிக்கை நியாயமானதுதான் இருந்தாலும் அவரது வேட்புமனுவை நிராகரிக்கிறேன் என்று கடிதம் கொடுத்ததோடு உங்களுக்கு தேவை என்றால் நீதிமன்றத்தில் பர்த்துக்கொள்ளுங்கள் என்று வாய்மொழியாகவும் கூறிவிட்டார்.
எனவே தேர்தல் அதிகாரி இப்போது பதவியில் இருக்கும் நிர்வாகத்தினருடன் இணைந்து ஜனநாதனின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை நிராகரித்தது போலவே நடைபெறக்கூடிய தேர்தலையும் நெறியற்ற முறையில் நேர்மை இல்லாமலேயே நடத்த திட்டமிட்டுள்ளார் என்பதை அறிந்து விலகுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
அமீர் அணியில் எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட இயக்குநர்கள் இடம்பெற்றுள்ளனர்.
**
மேலும் படிக்க
**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
**[நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!](https://minnambalam.com/k/2019/07/12/48)**
**[ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!](https://minnambalam.com/k/2019/07/12/19)**
**[நீதிமன்றத்திற்கு சவாலா? தலைமை நீதிபதி கேள்வி!](https://minnambalam.com/k/2019/07/12/57)**