CSK அணியின் புதிய ‘கேப்டன்’ யாருன்னு பாருங்க!

Published On:

| By Manjula

நாளை (மார்ச் 22) நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணி, பாஃப் டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் ரசிகர்கள் யாரும் எதிர்பாராதவிதமாக சென்னை அணியின் புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து சென்னை அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை அணியோட நெக்ஸ்ட் கேப்டன் யாரு?… சி.ஈ.ஓ காசி விஸ்வநாதன் ஓபன் டாக்!

முன்னதாக சென்னை அணியின் பங்குதாரர்கள் முக்கிய நிர்வாகிகள் ஆகியோருடன் ருத்துராஜ் தனியாக உரையாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அப்போதே ரசிகர்கள் நிச்சயம் அடுத்த சீசனில் ருத்துராஜ் தான் புதிய கேப்டனாக இருப்பார் என ஆரூடம் கூறிவந்தனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் அதனை நிரூபிப்பது போல இன்று (மார்ச் 21) சென்னை அணியின் புதிய கேப்டனாக ருத்துராஜ் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

ADVERTISEMENT

இதையடுத்து ஐபிஎல் தொடர் இந்தாண்டு இன்னும் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் நடப்பு தொடரில் கேப்டனை மாற்றிய 6-வது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாறியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ருத்துராஜிற்கு ரசிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனால் எக்ஸ் தளத்தில் தற்போது #MSDhoni மற்றும் #CSK ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றன.

ஒருபுறம் புதிய கேப்டன் குறித்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தாலும், தோனியின் கேப்டன்ஷியை மிஸ் செய்வதாக அவர் குறித்த நினைவலைகளை பகிர்ந்து ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அனுஷ்கா 50 : முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு.. இயக்குநர் இவரா?

வாட்ஸ்அப்பில் மத்திய அரசு விளம்பரத்தை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு!

வாசன், ஓபிஎஸ்ஸை கைவிட்ட அண்ணாமலை.. 20 தொகுதிகளில் பாஜக போட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share