உக்ரைன் ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் பலி!

Published On:

| By Minnambalam

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 314ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் உக்ரைன் ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் பலியான தகவல் வெளியாகியுள்ளது. 

ரஷ்ய – உக்ரைன் போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

ADVERTISEMENT

உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ரஷ்யா – உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ADVERTISEMENT

ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்தப் போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் பலியான தகவல் வெளியாகியுள்ளது.  

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் உள்ள மெகிவ்கா நகரில் ரஷ்ய வீரர்களின் தற்காலிக ராணுவ தளத்தில் உக்ரைன் ராணுவ தாக்குதல் நடத்தியது.

ADVERTISEMENT

ஹிம்ரஸ் ராக்கெட் ஏவு அமைப்பில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தனர்.

ஹிம்ரஸ் ராக்கெட் ஏவு அமைப்பில் இருந்து ஆறு ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அதில் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

அதே நேரம், மெகிவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 400 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும், 300 வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட ஹிம்ரஸ் ராக்கெட் ஏவு அமைப்பு மூலம் உக்ரைன் இந்த ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கரூர் கம்பெனி மீது டிஜிபியிடம் புகார்: டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் அதிரடி முடிவு!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share