2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிற நிலையில், இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே உலக மக்களின் விருப்பமாக இருக்கிறது.
ஆனால், அந்த விருப்பம் நிறைவேறுவதற்கான எந்த அறிகுறியும் இப்போதைக்கு இல்லை என்பது உறுதியாகி வருகிறது.
`உக்ரைன், நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் சேர நினைக்கிறது. இது எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ எனச் சொல்லி உக்ரைன் மீதான போரைத் தொடங்கினார் ரஷ்ய அதிபர் புதின்.
அப்போது, `10 நாள்களில் உக்ரைன் தலைநகர் கீவ்-வைக் கைப்பற்றிவிடுவோம்’ எனச் சவால் விட்டார் புதின். ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் ரஷ்யாவால் சொன்னதைச் செய்ய முடியவில்லை.
அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவிகளோடு உக்ரைனும் பதிலடி கொடுப்பதால், இந்தப் போர் ஓயாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஐ.நா-வின் அறிக்கைப்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தப் போரால் மாண்டவர்களின் எண்ணிக்கை 30,457. அதோடு, வீடுகளை இழந்து, சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்து வாழ்வதாகக் குறிப்பிடுகிறது ஐ.நா அறிக்கை.
அவர்களில், 3.7 லட்சம் பேர் உக்ரைனிலேயே வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருப்பதாகவும், மீதமுள்ள 6.3 லட்சம் பேர் வேறு நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்திருப்பதாகவும் ஐ.நா தெரிவிக்கிறது.
உக்ரைனோ, `ஐ.நா அறிக்கையிலிருப்பதைவிடப் பல மடங்கு அதிகமானோர் மரணித்திருப்பார்கள்’ என்கிறது.
உக்ரைன் மீதான போருக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டம் நடத்திய 19,855 ரஷ்யர்களை புதின் அரசு கைது செய்திருப்பதாகவும் தரவுகள் சொல்லப்படுகின்றன. Russia-Ukraine war enter in third year
இந்த நிலையில், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு வழங்குவதாகச் சொன்ன ஆயுதங்களைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.
மேலும் அமெரிக்கா, உக்ரைனுக்கு வழங்குவதாகச் சொன்ன 60 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி கிடைப்பதிலும் சிக்கல் உண்டாகியிருக்கிறது. அமெரிக்காவில் பொது தேர்தல் நடக்கவிருப்பதாலும், பணவீக்கம் அதிகரித்திருப்பதாலும் உக்ரைன் தனித்துவிடப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியோ, `ரஷ்யாவை வீழ்த்தும் வரை போராடுவோம்’ என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.
`இரண்டு ஆண்டுப் போரில், 31,000 உக்ரைன் வீரர்கள் மரணமடைந்திருக்கிறனர். ஆனால் புதினோ, மூன்று லட்சம் வீரர்களைக் கொன்றதாகப் பொய் சொல்லிவருகிறார். அவர், 2030 வரை அதிகாரத்தில் இருக்க நினைக்கிறார். அது நடக்காது’’ என்கிறார் ஜெலன்ஸ்கி.
உக்ரைனைக் கைப்பற்றும் வரை இந்தப் போரை நிறுத்த, புதின் தயாராக இல்லை என்பது அவரது நடவடிக்கைகளிலேயே தெரிகிறது. ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே உலக மக்களின் விருப்பமாக இருக்கிறது.
ஆனால், அந்த விருப்பம் நிறைவேறுவதற்கான எந்த அறிகுறியும் இப்போதைக்கு இல்லை என்பது தொடர்ந்து வரும் செய்திகளால் உறுதியாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
ஜார்க்கண்ட் ரயில் விபத்து : வதந்’தீ’யால் 12 பேர் பலி!
நாளை முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை!
டிஜிட்டல் திண்ணை: ஷாக் சர்வே… எடப்பாடிக்காக ஓபிஎஸ், டிடிவிக்கு பிரேக் போட்ட மோடி
வருடாந்திர ‘ஒப்பந்தத்தில்’ இருந்து… 2 ‘முக்கிய’ வீரர்களை கழட்டி விட்ட பிசிசிஐ
Russia-Ukraine war enter in third year