உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் உக்கிரத் தாக்குதல்- 500 டிரோன்கள் சீறிப் பாய்ந்தன!

Published On:

| By Mathi

Russia Launches Fierce Attack on Ukraine

உக்ரைன் நாடு மீது ரஷ்யா மீண்டும் உக்கிரத் தாக்குதலை நடத்தியது. 11 ஏவுகணைகள் மற்றும் 500 டிரோன்களை வீசி இந்தத் தாக்குதலை நடத்தியது ரஷ்யா. Russia Ukraine

உக்ரைன்- ரஷ்யா இடையேயான யுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் கீவ், கமி, கார்கில், செர்ன்கிளப் உள்ளிட்ட நகரங்களை இலக்கு வைத்து ரஷ்யா மீண்டும் உக்கிரத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கடும் பாதிப்பை எதிர்கொண்டது உக்ரைன்

உக்ரைன் நகரங்கள் மீது 500-க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் 11 ஏவுகணைகளை சரமாரியாக வீசித் தாக்கியது ரஷ்யா. உக்ரைன் மீதான ரஷ்யாவின் மிகப் பெரிய தாக்குதல் இது என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share