உக்ரைன் தலைநகரான கீவில் நேற்று (ஜூலை 3) இரவு முழுவதும் ரஷ்யா ட்ரோன்களால் அதிரடியாக தாக்கியுள்ளது.
இதில் குறைந்தபட்சம் 23 பேர் காயமடைந்ததுடன், உக்ரேனின் முக்கிய ரயில்வே முகாம்கள் சேதமடைந்தது மற்றும் நகரம் முழுவதும் கட்டிடங்கள், வாகனங்களில் தீவிபத்துகள் ஏற்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். russia attacks ukraine drones and missiles attack
ஐந்து அலைகளாக தொடர் தாக்குதல்கள் நடக்க, வான்வழி எச்சரிக்கை எட்டு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. ரஷ்யா மொத்தமாக 539 ட்ரோன்களையும், 11 ஏவுகணைகளையும் உக்ரைனில் ஏவி தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்தது.
”தாக்குதல்களின் முக்கிய இலக்கு உக்ரைனின் தலைநகர் கீவ்” என விமானப்படை தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்தது.
கீவ் மேயர் விட்டாலி கிளிட்ஸ்கோ கூறியதாவது, “காயமடைந்தவர்களில் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கீவில் உள்ள 10 மாவட்டங்களில் ஆறு மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளதாகவும் ஹோலோசிவ்ஸ்கி மாவட்டத்தில் ஒரு மருத்துவ வசதி தீப்பிடித்து எரிந்ததாகவும்” கூறினார்.
இந்தத் தாக்குதல்கள், சமீபத்திய வாரங்களில் தீவிரமடைந்துள்ள கீவ் மீதான ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களின் உச்சகட்டமாகும்.
மேலும், முப்பது லட்சம் மக்கள் வசிக்கும் நகரத்தின் மீதான தாக்குதலால் உக்ரைனுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற நோக்கிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வியாழக்கிழமை ரஷ்ய அதிபர் புடினுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் கூறினார்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் உக்ரைனுக்கான முக்கிய ஆயுதங்களின் சில கப்பல் சேவைகளை அமெரிக்கா நிறுத்திய முடிவால், தனது பாதுகாப்புத் திறனை இது குறைக்கும் என்று உக்ரைன் எச்சரித்தது.
உக்ரைன் அதிபர் வொலொதிமிர் செலென்ஸ்கி ஜூலை 3 கூறுகையில், அமெரிக்க ஆயுத வழங்கல்களைப் பற்றி டிரம்புடன் இன்றைய தினம் பேச விரும்புவதாக தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா ஏவிய 478 விமான ஆயுதங்களை உக்ரைன் விமானப்படை அழித்ததாகவும், நாட்டின் 8 இடங்களில் எதிரி விமான தாக்குதல்கள் நிகழ்ந்ததாகவும், அதில் 9 ஏவுகணைகளும் 63 ட்ரோன்களும் அடங்கும் என விமானப்படை தெரிவித்தது.
உருக்குலைந்த உக்ரைன்… 539 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள்…. ரஷ்யா உக்கிர தாக்குதல்!
Published On:
| By Minnambalam Desk
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
