சிவகார்த்திகேயன்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ‘SK 23’ படத்தின் படப்பிடிப்பு காதலர் தினமான இன்று(பிப்ரவரி14) தொடங்கியுள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு ஏற்றவகையில் முழுக்க, முழுக்க மாஸ் ஆக்ஷன் காட்சிகளுடன் இப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் செதுக்கி இருக்கிறாராம்.
இதில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வாலும், முக்கிய வேடமொன்றில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் நடிக்க இருக்கின்றனர். முன்னதாக மிருணாள் தாகூர் ஹீரோயினாக நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ருக்மணி வசந்த் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
கன்னடத்தில் வெளியான ‘சப்த சாகரடச்சே எல்லோ’ படத்தின் மூலம், ரசிகர்கள் மனதைக் கவர்ந்த ருக்மணி ஏற்கனவே விஜய் சேதுபதியின் 51-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அந்தவகையில் ‘SK 23’ தமிழில் அவருக்கு 2-வது படமாக அமைந்துள்ளது.
இந்த படத்தின் வழியாக மிருணாள் தாகூர் தமிழில் அறிமுகமாவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அவரது தமிழ் அறிமுகம் தள்ளிப்போய் இருக்கிறது.’SK 23′ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17-ம் தேதியன்று படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விவசாயிகள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற முடியாது: மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா
நீலகிரி இல்லை… மத்தியப் பிரதேசத்திலிருந்து எல்.முருகன் போட்டி!