ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

Published On:

| By Selvam

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவது தொடர்பான வழக்கின் விசாரணையை மார்ச் 27-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதிகள் ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் தலைமையிலான இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 17) விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “வடமாநில தொழிலாளர் பற்றிய வதந்தி உள்ளிட்ட காரணங்களால் ஆர்எஸ்எஸ் பேரணி பற்றி தமிழக அரசு ஆலோசிக்க முடியவில்லை. இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

ADVERTISEMENT

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செல்வம்

ADVERTISEMENT

பொதுக்குழு தீர்மானங்கள்: வைத்திலிங்கம் புதிய மனு-எடப்பாடி பதிலளிக்க உத்தரவு!

திரவுபதி முர்மு வருகை: குமரியில் சுற்றுலா பயணிகளுக்குத் தடை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share