ஆர்.எஸ்.எஸ் பேரணி: காவல்துறை கெடுபிடி!

Published On:

| By Selvam

தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 19) 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது.

விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உயர்நீதிமன்றத்தை நாடினார்கள். ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதியளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்தது.

அதனடிப்படையில் ஆர்எஸ்எஸ் சார்பில் தமிழகத்தில் 33 இடங்களில் இன்று (நவம்பர் 19) 3 கிலோ மீட்டர் தூரம் வரையில் பேரணி நடைபெற்றது.

ADVERTISEMENT

ஆர்எஸ்எஸ் பேரணியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக காவல்துறை தலைமை அனைத்து மாவட்ட போலீசாரை அலர்ட் செய்துள்ளது.

இதனால் முன்கூட்டியே ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு பேர் கலந்துக்கொள்வார்கள் என்று கணக்கெடுத்த உளவுத்துறை எவ்வளவு போலீஸ் போடவேண்டும் என்றும் அலர்ட் செய்தனர்.

ADVERTISEMENT

உதாரணமாக கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் சுமார் 300 பேர் பேரணியில் கலந்துகொள்வார்கள் என்றால் பாதுகாப்புக்கு 1300 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதாவது ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்துகொள்பவர்களை விட மூன்று மடங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயாகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ICC WorldCup Final: மோடி மைதானத்தில் கெத்து காட்டிய ராகுல் அவுட்… சைலன்ட் மோடில் ரசிகர்கள்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share