தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் திமுகவை விமர்சனம் செய்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.
தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய விஜய், ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். எங்களுக்கு ஐடியாலஜிக்கல் எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று தெரிவித்திருந்தார்.
மேலும், திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு தந்தை பெரியார், அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை ஒரு குடும்பம் சுரண்டி கொள்ளையடிக்கிறது என்று கடுமையாக சாடியிருந்தார்.
இந்தநிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் விஜய்யின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, “திமுக என்பது ஆலமரம். காய்த்த மரம் தான் கல்லடி படும். அதை தாங்கிக்கொள்ளும் சக்தி எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட போவதில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
இந்தியாவின் முதல் ராணுவ விமானம் தயாரிப்பு… டாடாவின் கனவு சாத்தியமானது!