டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (மே 22) தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “மோடி ஆட்சிக்கு வந்தபிறகு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது அமலாக்கத்துறை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வருகிறது. rs bharathi says supreme court befitting
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்று வருவதையும், 2021-க்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்று வருவதையும் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் எப்படியாவது இந்த அரசுக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை மூலம் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வந்தது.
இதற்கெல்லாம் சம்மட்டி அடி கொடுக்கின்ற வகையில், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், அமலாக்கத்துறையின் அக்கப்போர்களுக்கு முடிவு கட்டியுள்ளது.
இதற்கு பிறகாவது மத்திய அரசு அமலாக்கத்துறை அதிகாரிகளை தவறாக பயன்படுத்தப்படுக்கூடாது. தமிழ்நாடு, கேரளாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிளாக் மெயில் செய்யும் நிறுவனமாக அமலாக்கத்துறை மாறிவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை திமுக வரவேற்கிறது” என்றார்.
தொடர்ந்து, துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்டத்திருத்த மசோதாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, “அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்” என்றார். rs bharathi says supreme court befitting
