வங்கிக்கணக்குகளில் இருந்து திருடப்பட்ட ரூ.288 கோடி!

Published On:

| By Selvam

தமிழ் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 288 கோடி ரூபாய் பொது மக்களின் வங்கிக்கணக்கிலிருந்து நூதன முறையில் திருடப்பட்டிருப்பதாக சைபர் க்ரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ரூ.67 கோடி திருடப்பட்டிருக்கிறது. 

இப்படிப்பட்ட மோசடிகளைத் தடுக்க 2021ஆம் ஆண்டு சைபர் க்ரைம் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து பல்வேறு தடுப்புப் பணிகளை தமிழக காவல் துறையினர்  எடுத்து வருகின்றனர்.

காவல் துறை சார்பாக 19000 தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் 24 மணி நேரத்தில் உடனடியாக இந்த எண்ணில் புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரிகளிடம் பேசி பணத்தை மீட்கக்கூடிய பணிகளை தமிழ்நாடு சைபர் க்ரைம் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க 27,905 சிம் கார்டு போலியாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டு இதை முடக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

அந்தப் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு 22,240 சிம் கார்டுகள் முடக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

டிடிவி தினகரனை சந்திக்கிறார் பன்னீர்

தோனியைப் போன்ற பலநூறு வீரர்களை உருவாக்குவதே நோக்கம்: முதல்வர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share