தமிழ்நாடு பட்ஜெட்டில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 25,858 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்று (பிப்ரவரி 19) தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கான அறிவிப்பில்,
“தமிழ்நாட்டில் நகர்ப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, பொது சுகாதாரம், இணைப்புச் சாலைகள், தெருவிளக்குகள், நவீன மின் மயானம், நூலகங்கள் மற்றும் கணினியுடன் கூடிய அறிவுசார் மையங்கள், பாதாளச் சாக்கடை மற்றும் சமுதாய அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கும் நோக்கத்தோடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் 1,328 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிவுற்று 1,659 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தினைச் செயல்படுத்திட, வரும் நிதியாண்டில் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
அம்ருத் 2.0 திட்டத்தில், 4,942 கோடி ரூபாய் ஒன்றிய அரசு பங்களிப்புடனும் 9,047 கோடி ரூபாய் மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடனும், திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2024-25 ஆம் ஆண்டில், பல்வேறு திட்ட நிதிகளைத் திரட்டி நகர்ப்புர உள்ளாட்சிப் பகுதிகளில் 4,457 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.
சென்னை பெருநகர மாநகராட்சியில் நவீன, உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவதற்கும் 42 விரிவாக்கப் பகுதிகளில் கட்டமைப்பை மேம்படுத்தவும் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது.
இதுவரை. கடந்த 3 ஆண்டுகளில் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1183 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு வரும் நிதியாண்டு 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
விரைவான நகரமயமாக்கலின் சென்னை மாநகரத்தில் வாகனப் போக்குவரத்து பன்மடங்காக அதிகரித்துள்ளதால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, சென்னையில் அதிகப் போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகள் அகலப்படுத்துவதற்காகக் கண்டறியப்பட்டுள்ளன.
அதன் முதற்கட்டமாக, புதிய ஆவடி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் செம்பியம் ரெட்ஹில்ஸ் சாலைகளை 18 மீட்டராகவும். டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலைகளை 30.5 மீட்டராகவும் வளர்ச்சி உரிமைப் பரிமாற்ற (IDR) முறையில் அகலப்படுத்தும் திட்டம், சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
சிங்காரச் சென்னையை உருவாக்கும் நோக்கோடு சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய நகர்புரப் பொதுச் சதுக்கம், கண்காட்சி அரங்குகள். திறந்தவெளி திரையரங்கம் போன்ற நவீன சமூகக் கட்டமைப்பு வசதிகளை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 104 கோடி ரூபாய் செலவில் மேற்கொண்டு வருகிறது.
மேலும், சென்னை கடற்கரையோரப் பகுதிகளை அழகுற சீரமைத்து மேம்படுத்திடும் நோக்கோடு கோவளம், எண்ணூர், பெசன்ட் நகர் ஆகிய கடற்கரைப் பகுதிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வசதிகளுடன் மெருகூட்டி அழகுபடுத்தப்படும்.
நாட்டிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் நகரங்களில் ஒன்றான சென்னை மாநகரத்தின் சில பகுதிகளில், குறிப்பாக, வடசென்னையில் போதிய அளவு அடிப்படை வசதிகளும் கட்டமைப்புகளும் இல்லாத நிலை உள்ளது.
சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய “வடசென்னை வளர்ச்சித் திட்டம்” எனும் புதிய முயற்சியை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், வாட்டர் பேசின் (water basin) சாலையில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் புதிய குடியிருப்புகள், எழும்பூரில் குழந்தைகள் நல மருத்துவமனையில் 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் sw ewigs Able A Super speciality block).
ராயபுரத்தில் RSRM மருத்துவமனையில் 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 புதிய கட்டடங்கள். பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய தளங்கள். 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிற்பயிற்சி நிலையம், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரெட்டேரி.
வில்லிவாக்கம், பாடி ஏரிகளை சீரமைத்தல், 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 பள்ளிகளைப் புதுப்பித்தல், மேம்படுத்துதல் மற்றும் கணினிமயமாக்கல் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் என மொத்தம் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சி வடசென்னை பகுதிகளில் மக்கள்தொகை மற்றும் அவற்றுக்கான பெருகிவரும் தேவைகளை நிறைவுசெய்ய, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள கழிவுநீர் சேகரிப்புக் குழாய்கள், கழிவுநீர் இறைக்கும் நிலையங்கள், உந்து குழாய்கள் மற்றும் உபகரணங்களின் செயல்திறன் போதுமானதாக இல்லை.
எனவே, வடசென்னைப் பகுதிகளில் கழிவுநீர் மற்றும் குடிநீர் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு கழிவுநீரைத் திறம்பட அகற்றுவதற்கும், நீர்நிலை மாசுபாட்டைத் தவிர்ப்பதற்கும் 946 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டம் நிறைவேற்றப்படும்.
சென்னையை ஒட்டி பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீனத் திரைப்பட நகரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் நோக்கத்தோடு 1,517 கோடி ரூபாய் மதிப்பில் நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
9 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட இந்நிலையம் நிறைவுறும் தருவாயில் உள்ளது; விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.
இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 25,858 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சின்னதம்பி பெரியதம்பி – ’டபுள் ஹீரோ’ படங்களுக்கான ‘ரோல்மாடல்’