2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247.00 கோடி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 1.20 லட்சம் பேர் பயனடைவர்.
கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரித்து நலிவடைந்த நிலையில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு.
அதன் ஒரு பகுதியாக கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஒன்றிய அரசு அறிவிக்கும் கரும்பு விலைக்கு மேல் ஊக்கத்தொகை அறிவித்து வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர், 2024-25-ம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2023-24 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில், அரசு வெளியிட்டுள்ள இந்த ஆணையின்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத்துறை, 12 கூட்டுறவு மற்றும் 16 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2023-24 அரவைப்பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2919.75 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.215-யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.3134.75 விவசாயிகள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2023-24 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விவரம் சேகரிக்கப்பட்டு. சர்க்கரைத்துறை இயக்குநரகத்தால் கூர்ந்தாய்வு செய்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களின் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.247.00 கோடி மதிப்பில் மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா… சண்டே ஸ்பெஷல்: பாக்கெட் பொருட்கள் வாங்குபவரா நீங்கள்.. ஒரு நிமிஷம்!
டிஜிட்டல் திண்ணை: மூட்டை கட்டும் ஆர்.என்.ரவி… புதிய ஆளுநர் வி.கே.சிங்? ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!
தமிழ்த்தாய் வாழ்த்து… ஆளுநருக்கு எதிராக திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!
சு.வெங்கடேசன் பேச்சும்… மூர்த்தி பதிலும்: என்ன நடக்கிறது மதுரை திமுக கூட்டணியில்?