எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.2100 கோடி கடன் : டி.ஆர்.பி ராஜா அறிவிப்பு!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 2100 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று (ஜூன் 28) தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்ந்த  அறிவிப்புகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டார்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டை விண்வெளி தொழிலில் முன்னணி மாநிலமாக மேம்படுத்தவும், அதிகளவிலான முதலீடுகளை ஈர்க்கவும் விண்வெளி தொழில் கொள்கை (Space Tech Policy) வெளியிடப்படும்

பொம்மைகள், பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கு சலுகைகளுடன் கூடிய ஒரு சிறப்பு திட்டம் வெளியிடப்படும்.

ADVERTISEMENT

டோக்கியோவில் வழிகாட்டி நிறுவனம் மூலம் ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு அமைவு (Japan Desk) அமைக்கப்பட்டு, ஜப்பான் நாட்டிடம் இருந்து அதிகளவில் முதலீடுகள் ஈர்க்கப்படும்.

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.

ADVERTISEMENT

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூரில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் மேலும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மற்றும் கூத்தாநல்லூரில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும்.

தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு சேவைகள் வழங்குவதற்கும், முதலீடுகளை மேலும் ஈர்ப்பதற்கும், கோயம்புத்தூரில் வழிகாட்டி நிறுவனத்தின் கிளை அலுவலகம் தொடங்கப்படும்.

கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புதிய மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.
தனியார் பங்களிப்புடன் கூட்டு முயற்சியில் (Joint Venture) தொழிற்பூங்காக்களை சிப்காட் உருவாக்கும்.

150-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையிலும், 8,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2,100 கோடி கடன் வழங்கப்படும்.

ரூ.25 கோடியில் M-Sand உற்பத்தி ஆலை, ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் அமைக்கப்படும்.

தொழிலாளர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமைப்படுத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.6 கோடியில் விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும்.

தொழிற்சாலைகளின் தயாரிப்பு பொருட்களை, ஒருசேர காட்சிப்படுத்த ஏதுவாக, இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், ரூ.5 கோடியில் தனித்துவம் வாய்ந்த ஒரு தயாரிப்பு பொருட்கள் காட்சி மையம்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, ஒரு புதிய மைல்கல்லை நோக்கி கொண்டு செல்ல, சுற்றுலா தலங்களின் உள்கட்டமைப்பு தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் டி.ஆர்.பி.ராஜா.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

நீட் தேர்வு குறித்து விவாதம்: ராகுல் மைக் ஆப்… முடங்கிய நாடாளுமன்றம்!

ஜாபர் சாதிக்கை கைது செய்த அமலாக்கத்துறை சென்னை டீம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share