TN Agri Budget: 2 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.208 கோடி நிவாரணம்!

Published On:

| By Kavi

208 crore relief for 2 lakh farmers

தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்ரவரி 20) தாக்கல் செய்தார்.

இதில் இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான அறிவிப்பில், “தமிழ்நாட்டில், கடந்த 2022-2023-ஆம் ஆண்டில், தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்த கனமழை, மாண்டஸ் புயல், வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்த கனமழை, பருவம் தவறிப் பெய்த மழை, வறட்சி, கடந்த மார்ச் 2023-இல் பெய்த ஆலங்கட்டி மழை ஆகிய இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர்ச் சேதத்திற்கு, 380 கோடியே 40 இலட்சம் ரூபாய் நிவாரணத்தொகை, 4 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

குறுவை (காரீஃப்) பருவத்தில் ஏற்பட்ட மகசூல் இழப்பு, மிக்ஜாம் புயல், மக்காச்சோளப்பயிரில் ஏற்பட்ட மகசூல் இழப்பு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 85 ஆயிரம் விவசாயிகளுக்கு 118 கோடியே 77 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், கோடை மழை, தென்காசி மாவட்டத்தில் தென் மேற்குப் பருவமழை காலத்தில் மழை குறைவால் ஏற்பட்ட மகசூல் இழப்பு, தென் மாவட்டங்களில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருமழை போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு 208 கோடியே 20 இலட்சம் ரூபாய் நிவாரணத்தொகை, 2 இலட்சத்து விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்” என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

TN Agri Budget : புவிசார் குறியீடு பெறப்போகும் 10 விளைப்பொருட்கள்!

Agri Budget 2024 : முக்கனி சிறப்புத்‌ திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share