ரூ.20 லட்சம் வாடகை பாக்கி : யுவன் சங்கர் ராஜா மீது புகார்!

Published On:

| By christopher

Rs. 20 lakh rent arrears: Complaint against Yuvan Shankar Raja!

இருபது லட்சம் ரூபாய் வாடகை தராமல் மோசடி செய்துவிட்டதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளராக வலம் வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இவர் சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், ஜமீலா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் யுவன் சங்கர் ராஜா வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

இந்நிலையில் ஜமீலாவின் சகோதரர் முகமது ஜாவித் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், ‛‛கடந்த 2 ஆண்டுகளாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள எனது சகோதரி ஜமீலாவுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார்.  இந்த வீட்டுக்கு யுவன் சங்கர் ராஜா ரூ.20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்தார். வாடகையை எனது சகோதரி கேட்கும்போதெல்லாம் அவர் மறுத்து பேசி வந்துள்ளார்.

நான் வாடகை பணம் கேட்க போன் செய்தேபோதும் அவர் செல்போனை எடுக்கவில்லை. தற்போது அவர் எந்த தகவலும் சொல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு காலி செய்வதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். நேற்றும், இன்றும் வீட்டில் உள்ள பொருட்கள் வெளியே எடுத்து செல்லப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் உள்ள பொருட்களை யுவன் சங்கர் ராஜா சேதப்படுத்தியுள்ளார்.

இதனால் புகார் தொடர்பாக விசாரித்து யுவன் சங்கர் ராஜாவிடம் வாடகை பாக்கி மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை யுவன் சங்கர் ராஜா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், புகார் குறித்து போலீசார் விசாரணைையை தொடங்கி உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பெண் ஐபிஎஸ் அதிகாரி குறித்து ஆபாச பதிவு : ஜோதிமணி கண்டனம்!

கிடப்பில் போடப்படுகிறதா மதுரை மெட்ரோ ரயில் திட்டம்… உண்மை நிலை என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share