Skip to content
  • முகப்பு
  • அரசியல்
      அரசியல்
      டிஜிட்டல் திண்ணை
  • சமூகம்
      தமிழ்நாடு
      இந்தியா
      உலகம்
  • பொழுதுபோக்கு
      செய்தி
      சினிமா விமர்சனம்
      ஓடிடி
      போட்டோ கேலரி
  • பணம்
      பொருளாதாரம்
      சந்தை
      முதலீடு
      வேலைவாய்ப்பு
  • லைஃப்ஸ்டைல்
      உடல்நலம்
      மனநலம்
      வீட்டு மருத்துவம்
      ரெசிப்பி
      பியூட்டி & பேஷன்
  • சிறப்புக் கட்டுரை

பெண்களுக்கு மாதம் ரூ.1000 : போஸ்டல் பேமெண்ட்ஸ் கணக்கு தொடங்குவது எப்படி?

By Kavi

|

Published on 30 Aug 2023, 9:29 PM

Follow us on
Google News
Add As A Preferred
Source On A Google

Share:

தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு துவங்க அஞ்சல் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவுள்ளது. இதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம். ஆனால் ஆதார் இணைப்பு இல்லாதவர்களுக்கு போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 30) தமிழ்நாடு அஞ்சல் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், “தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம் என்பதால், தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள்/தபால்காரர்/கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்கி பயன்பெறலாம்.
மேலும், தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி e-KYC (விரல் ரேகை மூலம்) மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்க முடியும். இந்தக் கணக்கிற்கு இருப்பு தொகை எதுவும் கிடையாது (Zero Balance Account).
தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமை தொகையை, அருகில் உள்ள அஞ்சலகங்களிலும், DOOR STEP BANKING என்ற சிறப்பு சேவையின் வாயிலாகவும் தங்கள் இல்லங்களிலேயே தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டப் பயனாளிகள், பிரதமரின் கிசான் திட்டப் பயனாளிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை, பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்கி பயன் பெறலாம்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான வங்கியாகும். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அணுகுவதற்கு எளிதான. குறைந்த கட்டணங்களுடன், நகரங்கள் மற்றும் வங்கிகள் இல்லாத கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு எளிய முறையில் வங்கிச் சேவை அளிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது.
எனவே, பயனாளிகள் அனைவரும் அஞ்சல் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிச் சேவையை பயன்படுத்தி, தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு துவங்கி பயனடையுமாறு தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா

ADVERTISEMENT

பிரதமர் பதவி யாருக்கு?: இந்தியா கூட்டணி குறித்து உத்தவ் தாக்கரே

”ஜவான் படம் உருவாக காரணம் விஜய் தான்”- அட்லி

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel
சமீபத்திய பதிவுகள்
  • DMK MLA Vasantham Karthikeyan

    VIDEO: கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. ஆபாச மெசேஜ்: சிபிஐ விசாரணை நடத்துக- திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்

    10 Nov 2026, 7:12 PM

  • ‘மக்கள் பிரதிநிதி பதவி பெண்களை மோசமாக அணுக விதிவிலக்காக இருக்க முடியுமா?’ மாதர் சங்கம்

    10 Nov 2026, 5:43 PM

  • EPS Attacks Vijay Govt Over Inaction

    வாய் மூடி மவுன சாமியாராக முதல்வர் – மேகதாது விவகாரத்தில் விளாசிய ஈபிஎஸ்

    10 Nov 2026, 5:17 PM

  • M.Veerapandian

    பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக MLA வுக்கு சிபிஐ கண்டனம்

    10 Nov 2026, 4:51 PM

  • Vaiko-Sterlite

    Mr. விஜய்.. ’ஸ்டெர்லைட்’ அனில் அகர்வால் உங்களை சந்திக்க முயற்சி.. வைகோ ’வார்னிங்’

    10 Nov 2026, 4:47 PM

  • Vaiko-Mdmk-TVK

    தவெக கூட்டணியில் சிக்கல்? விஜய்-க்காக காங்கிரஸ், விசிக மீது வைகோ கடும் பாய்ச்சல்!

    10 Nov 2026, 4:37 PM

  • விஜய் பதவி விலக வேண்டும்! – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

    10 Nov 2026, 4:17 PM

  • velmurugan says i am not ask apology

    ஒரே நாளில் 11 கொலைகள்: மக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? – வேல்முருகன் காட்டம்

    10 Nov 2026, 3:35 PM

  • ஒரே நாளில் 17 கொலைகள்: ‘ICU வில் சட்டம் ஒழுங்கு’ விஜய் அரசை விளாசிய மு.க.ஸ்டாலின்

    10 Nov 2026, 2:40 PM

  • ‘அத்தனைக்கும் விஜய் அல்லவா பொறுப்பு’ நடிகை கஸ்தூரி

    10 Nov 2026, 2:13 PM

About Us Contact Us Privacy Policy Terms & Condition
© 2026 All Rights Reserved to Minnambalam | Web Developed by Reptus