10 லட்சம் ரொக்கம் 50 பவுன் நகை பத்தல… வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்த பேராசிரியை!!

Published On:

| By Kumaresan M

நாகர்கோவிலில் வரதட்சணை கொடுமையால் கல்லூரி விரிவுரையாளர் உயிரை மாய்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ஸ்ருதி. இவரது தந்தை தமிழக மின்வாரியத்தில் பணி புரிந்துள்ளார். இதனால், குடும்பத்தினர் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு குடி பெயர்ந்துள்ளனர். ஸ்ருதி கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக வேலை பார்த்துள்ளார். இந்த நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு சுசீந்திரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் ஸ்ருதிக்கு திருமணம் நடந்தது. வரதட்சணையாக 10 லட்சம் ரொக்கமும் 50 பவுன் நகையும் கொடுக்கப்பட்டுள்ளது. கார்த்திக்கும் மின்வாரியத்தில்தான் பணி புரிகிறார்.

இந்த நிலையில், திருமணம் முடிந்த நாளில் இருந்து கார்த்திக்கின் தாயார் ஸ்ருதியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். கணவருடன் சேர்ந்து இருக்க கூடாது, ஒரே அறையில் உறங்கக் கூடாது என்று கூறி துன்புறுத்தியுள்ளார். மேலும், கூடுதல் வரதட்சணை வாங்கி வா… இல்லையென்றால் உங்கள் வீட்டுக்கே போய் விடு என்று கூறி மாமியார் கொடுமைப்படுத்தியுள்ளார்.

இந்த கொடுமைகளையெல்லாம் ஸ்ருதி தனது தாயிடத்தில் போனில் கூறி அழுதுள்ளார். அப்போது, அவரின் தாய் அட்ஜஸ்ட் செய்து வாழும்படி அறிவுரை கூறியுள்ளனர்.

இந்த நிலையில், கணவர் வீட்டிலேயே ஸ்ருதி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இறப்பதற்கு முன்பு கடைசியாக தாயிடம் போனில்   பேசிய ஸ்ருதி, தனது நகைகள் மாமியார் வீட்டில்  உள்ளதாகவும் எப்படியாவது அவற்றை திரும்ப பெற்று விடுங்கள் என்று கூறியுள்ளார். தற்போது, இந்த வாய்ஸ் கிளிப்பிங்குகள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ஆளுநருடன் மோதல் : பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த மா.சுப்பிரமணியன்

கமலாவை 2 புள்ளிகள் வித்தியாசத்தில் முந்திய ட்ரம்ப் : வால் ஸ்டீரிட் ஜர்னல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share