ரயில்வேயில் 22,000 காலியிடங்கள்… குரூப்-டி (Group D) வேலைக்குத் தயாராகுங்கள்! 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

RRB Group D Indian railways recruitment

“மத்திய அரசு வேலைன்னாலே கெத்துதான்… அதுவும் ரயில்வே வேலைன்னா சொல்லவா வேணும்?” லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுத் துறையான இந்திய ரயில்வேயில், மீண்டும் ஒரு மாபெரும் ஆட்சேர்ப்பு திருவிழா தொடங்கப்போகிறது. ரயில்வே தேர்வு வாரியம் (RRB), 2026ஆம் ஆண்டிற்கான குரூப்-டி (Level-1) பணியிடங்களை நிரப்பத் தயாராகி வருகிறது.

சுமார் 22,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு இது உண்மையிலேயே ஒரு ‘லைஃப் செட்டில்’ ஆகும் வாய்ப்பு!

ADVERTISEMENT

எப்போது வரும் அறிவிப்பு?

ரயில்வே வாரியம் சமீப காலமாக ஆண்டுதோறும் காலண்டர் வெளியிட்டு, அதன்படித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், 2026ஆம் ஆண்டிற்கான குரூப்-டி அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

என்னென்ன வேலைகள்?

குரூப்-டி என்பது இப்போது ‘Level-1’ என்று அழைக்கப்படுகிறது.

ADVERTISEMENT
  • டிராக் மெயின்டெய்னர் (Track Maintainer)
  • அசிஸ்டென்ட் பாயிண்ட்ஸ்மேன் (Assistant Pointsman)
  • எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மற்றும் சிக்னல் பிரிவில் உதவியாளர்கள்.

இதுபோன்று பல்வேறு களப்பணி சார்ந்த வேலைகள் இதில் அடங்கும்.

கல்வித் தகுதி என்ன?

இங்குதான் கவனிக்க வேண்டும். முன்பு வெறும் 10ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால், இனி வரும் காலங்களில் தொழில்நுட்பப் பணிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ (ITI) அல்லது நேஷனல் அப்ரண்டிஸ் சான்றிதழ் (NAC) முடித்திருப்பது கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளது.

சில குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்டும் 10ஆம் வகுப்பு போதுமானதாக இருக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால்தான் இது 100% உறுதியாகும்.

சம்பளம் எப்படி?

வேலைக்குச் சேர்ந்தவுடனேயே கைநிறையச் சம்பளம்.

  • அடிப்படை ஊதியம் (Basic Pay): ரூ.18,000.
  • இதுபோக அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA) என எல்லாம் சேர்த்து ஆரம்பமே மாதம் ரூ.28,000 முதல் ரூ.30,000 வரை சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.

வயது வரம்பு:

பொதுவாக 18 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுத் தளர்வு உண்டு.

தேர்வு முறை:

  • கணினி வழித் தேர்வு (CBT): ஒரே ஒரு தேர்வுதான். இதில் பாஸ் ஆனால் போதும்.
  • உடல் தகுதித் தேர்வு (PET): ஓட்டப்பந்தயம் மற்றும் எடை தூக்குதல்.
  • சான்றிதழ் சரிபார்ப்பு (DV): மருத்துவப் பரிசோதனைக்குப் பின் வேலை உறுதி.

நோட்டிபிகேஷன் வந்த பிறகு படிக்கலாம்னு நினைக்காதீங்க. ரயில்வே தேர்வைப் பொறுத்தவரை சயின்ஸ் (Science) மற்றும் மேக்ஸ் (Maths) தான் வெற்றியைத் தீர்மானிக்கும். வட மாநிலத்தவர்கள் அதிகம் போட்டிபோடும் களம் இது. நம்ம ஊர் பசங்க இப்போதே என்.சி.இ.ஆர்.டி (NCERT) புத்தகங்களை தூசி தட்டினால்தான், 2026ல் ரயில்வே யூனிஃபார்ம் போட முடியும். படிக்க ஆரம்பிங்க பாஸ்!”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share