KKR vs RR: துஷாருக்கு 1 ஓவர் தானா? ராஜஸ்தான் தோல்விக்கு காரணம் இவர் தான்!

Published On:

| By christopher

rr lost to kkr by 8 wickets… parag gets roast

ராஜஸ்தான் அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. rr lost to kkr by 8 wickets… parag gets roast

முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது முதல் தோல்விக்கு பிறகு குவஹாத்தியில் உள்ள பார்சபரா மைதானத்தில் இன்று (மார்ச் 26) சந்தித்தன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தாவின் கேப்டன் ரஹானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் பேட்டிங் சொதப்பல்! rr lost to kkr by 8 wickets… parag gets roast

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக துருவ் ஜோரல் 33 ரன்களும், ஜெய்ஸ்வால் 29 ரன்களும் குவித்தனர்.

கொல்கத்தா அணி தரப்பில் வைபவ், ஹர்ஷித், மொயின், வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஸ்பென்சர் ஜான்சன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

குயிண்டன் டி காக் அதிரடி! rr lost to kkr by 8 wickets… parag gets roast

தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் தடுமாறிய மொயின் அலி 5 ரன்களில் வெளியேறினார். எனினும் உறுதியாக களத்தில் நின்று அதிரடி காட்டிய குயிண்டன் டி காக் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி 97 ரன்கள் குவித்தார்.

இறுதியில் அவர் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதன்மூலம் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. மேலும் நடப்புத் தொடரில் முதல் வெற்றியை கொல்கத்தா அணி பெற்றது.

கேப்டன் மீது விமர்சனம்!

தொடர்ந்து இரண்டாவது முறையாக ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார்.

கடந்த இரு சீசன்களில் சென்னை அணிக்காக சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இருந்தார். (2024 – 23, 2024 – 17)

இந்த முறை ராஜஸ்தானின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ள துஷார், ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

ஆனால் இன்றைய போட்டியில் அவருக்கு ஒரு ஓவர் மட்டுமே கொடுத்துள்ளார் கேப்டன் ரியான் பராக். துஷாரை இன்னும் கூடுதல் ஓவரை வீச வைத்திருந்தால், அவர் நிச்சயம் விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share