பழனி முருகன் கோயிலில் 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம்!

Published On:

| By christopher

Ropeway service suspended for 31 days at Palani

பழனி முருகன் கோயிலில் வரும் 15ம் தேதி முதல் 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Ropeway service suspended for 31 days at Palani

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது.

ADVERTISEMENT

மேலும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின் இழுவை ரெயில் (விஞ்ச்) ஆகிய சேவைகள் உள்ளன. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் 3 நிமிடத்தில் மலைக்கோவிலுக்கு செல்வதால் பெரும்பாலானோர் ரோப்கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரோப் கார் சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெறும்.

ADVERTISEMENT

அதன்படி, வரும் 15ஆம் தேதி முதல் 31 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது என்றும், பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்யும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share