ரோமியோ” டூ “மழை பிடிக்காத மனிதன்” : விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அறிவிப்பு..!

Published On:

| By Kavi

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் சமீபத்தில் தியேட்டரில் வெளியான படம் “ரோமியோ”. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருந்தார்.

ரோமியோ படம் தியேட்டரில் வெளியான போது கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால்  அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான பிறகு இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ADVERTISEMENT

தற்போது ரோமியோ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனியின் அடுத்த படம் குறித்த ஒரு அப்டேட் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் கடந்த 2014 ஆம் ஆண்டு “கோலி சோடா” என்ற திரைப்படத்தை இயக்கியதின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.

ADVERTISEMENT

கோலிசோடா படத்திற்கு பிறகு இவரது இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான “10 எண்றதுக்குள்ள” திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து இருந்தாலும் அதன் பிறகு விஜய் மில்டன் இயக்கிய “கடுகு” மற்றும் “கோலி சோடா 2” ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் “மழை பிடிக்காத மனிதன்” என்ற படம் தயாராகி உள்ளது.

ADVERTISEMENT

இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Image

ஆக்சன் திரில்லர் கதை களத்தில் உருவாகி உள்ளதாக கூறப்படும் இந்த படத்தை Infiniti Film Ventures நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், மேகா ஆகாஷ் ஆகிய மூவரும் இணைந்து இருக்கும் “மழை பிடிக்காத மனிதன்”  படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் அவர்களை இந்த படத்தில் நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்ததாகவும், ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

“மழை பிடிக்காத மனிதன்” திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

புது கார் வாங்கிய பிரபல சீரியல் நடிகை..! வைரல் போட்டோஸ்..!

பாஜக வேட்பாளர்களை விரட்டியடிக்கும் விவசாயிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share