கொந்தளித்த ரோஹித் சர்மா மனைவி… மும்பை இந்தியன்ஸ் ‘இமேஜ்’ டோட்டலா காலி!

Published On:

| By Manjula

Mumbai Indians coach explanation

மும்பை இந்தியன்ஸ் அணிக்குள், ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகாவால் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

மும்பை அணி ரோஹித் சர்மாவிற்குப் பதிலாக ஹர்திக் பாண்டியாவை நியமித்ததில் இருந்தே, அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்து கொண்டு தான் உள்ளது.

ADVERTISEMENT

ஒருபுறம் ஆசையாக எடுத்த ஹர்திக் பாண்டியா உடற்தகுதியை நிரூபிக்க கடுமையாக போராடி வருகிறார். மறுபுறம் ரோஹித் சர்மாவை நீக்கியதற்கு இன்னும் அந்த அணி விளக்கம் அளித்துக்கொண்டு தான் இருக்கிறது.

ADVERTISEMENT

அந்த வகையில் லேட்டஸ்ட்டாக மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ”இந்தியாவில் பல ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொள்ளாமல் உணர்ச்சி வசப்படுகிறார்கள்.

மும்பை அணிக்காக ரோஹித் பல ஆண்டுகள் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்துள்ளார். தற்போது இந்தியாவின் அனைத்து பார்மேட்டிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

ADVERTISEMENT

எங்கு சென்றாலும் கேமரா அவரை பின்தொடர்கிறது. அந்தளவுக்கு அவர் பிஸியாக இருக்கிறார். மும்பை அணியை பொறுத்தவரை கடந்த சில சீசன்களாக அவர் பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்கவில்லை.

பேட்ஸ்மேனாக அவரது பங்களிப்பு அணிக்குத் தேவை என்பதால் தான், கேப்டன் பொறுப்பில் இருந்து அவரை நீக்கினோம்.

ஒரு பேட்ஸ்மேனாக அவர் சுதந்திரமாக விளையாட வேண்டும். இதற்கு பின்னால் முழுக்கவே கிரிக்கெட் காரணங்கள் தான் உள்ளன,” என்றார். மார்க் பவுச்சரின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சாஜ்தே இன்ஸ்டாகிராமில் மார்க் பவுச்சரின் பேட்டிக்கு கீழே, ”இதில் நிறைய தவறுகள் உள்ளன”, என பதிவிட்டுள்ளார்.

 

அவரின் இந்த பதிவு ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த தீயில் மேலும் எண்ணெய் ஊற்றியது போல ஆகிவிட்டது.

இதைப்பார்த்த ரசிகர்கள், ”ரோஹித் நீங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆட வேண்டாம்”, ”வேறு அணிக்கு சென்று விடுங்கள்”, ”மும்பை அணி உங்களுக்கு வேண்டாம்” என கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

உச்சகட்டமாக மும்பை இந்தியன்ஸ் கொடியை எரித்தும் தங்களது கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்து இருக்கின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் #MumbaiIndians என்னும் ஹேஷ்டேக் தற்போது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மலையாளத்தில் ட்வீட் போட்ட ஸ்டாலின் : என்ன காரணம்?

அதிரடி ‘வீரரை’ வளைத்துப்போட்ட ஆர்சிபி… இந்த வாட்டி ‘கப்பு’ மிஸ் ஆகாது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share