ஆர்.சி.பி கேப்டன் ஆகிறார் ரோகித் சர்மா?- ஏபிடி கொடுத்த க்ளூ

Published On:

| By Kumaresan M

மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரோகித் சர்மா பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் சேர வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது என்று ஏ.பி.டி. வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

கடந்த சீசனில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் நீக்கப்பட்டு அவருக்கு  பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இது ரோகித்தை அவமதிப்பது போல இருந்தது. அதே வேளையில், கடந்த சீசனில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தையும் மும்பை பிடித்தது. மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் ஜொலிக்கவில்லை என்பதையே இது காட்டியது.

அதோடு, வரும் ஐ.பி.எல் மெகா ஏலத்தில் ரோகித் சர்மாவை மும்பை அணி எடுக்காது என்றும் அப்படியே எடுத்தாலும் குறைந்த விலைக்கு எடுக்க வாய்புள்ளதாகவும் சொல்லப்பட்டது .  இதனால், மெகா ஏலத்தில் ரோகித் சர்மா ஏலத்துக்கு வர வாய்ப்புள்ளது. இதையடுத்து ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப், ஆர்.சி.பி அணி ரோகித்தை வாங்க வேண்டுமென்று வற்புறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், ஆர்.சி.பிஅணியின் முன்னாள் ஜாம்பவான் ஏ.பி.டி. வில்லியம்ஸ் கூறுகையில், ரோகித் சர்மா மும்பையில் இருந்து ஆர்.சி.பி அணிக்கு வந்தால், அது கண்டிப்பாக தலைப்பு செய்தியாக மாறும். இது குஜராத்தில் இருந்து ஹர்திக் பாண்ட்யா மும்பைக்கு மாறியதை போல மிகப் பெரிய விஷயம் ஆகும். அப்படி வந்தால் கடவுளே அது எவ்வளவு பெரிய விஷயமாக இருக்கும். அதற்கு வாய்ப்பில்லை என்று நான் கருதவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை மும்பை அணியில் இருந்த ரோகித் ஆர்.சி.பிக்கு மாறினால் அந்த அணியின் கேப்டனாகவுள்ள டுப்ளெசி மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

சென்னைதான் டாப் : விமானப்படை தலைமைத் தளபதி!

7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை அப்டேட்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share