ADVERTISEMENT

விராட், ரோஹித்தின் அதிரடி முடிவால்… பெரும் தலைவலியில் சிக்கித்தவிக்கும் பிசிசிஐ

Published On:

| By Manjula

rohit virat want to play t20

இந்திய அணியின் மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவால் இந்திய அணியின் தேர்வுக்குழு தற்போது பெரும் தலைவலியில் உள்ளது. rohit virat want to play t20

கடந்த 2௦22-ம் ஆண்டு நடைபெற்ற டி2௦ உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பிறகு ரோஹித், விராட் இருவரும் டி2௦ போட்டிகளில் இடம் பெறவில்லை.

ADVERTISEMENT

இதனால் வருகின்ற ஜூன் மாதம் நடைபெறும் டி2௦ உலகக்கோப்பை தொடரில் இருவரும் விளையாடுவார்களா? மாட்டார்களா? என்பது குறித்த சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக உள்ளது.

உலகக்கோப்பை தொடரின் தோல்விக்கு பின் விராட், ரோஹித் இருவரின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அவர்களே முடிவு செய்வார்கள் என பிசிசிஐ தெரிவித்து இருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் உலகக்கோப்பை டி2௦ தொடரில் விளையாட விரும்புவதாக ரோஹித், விராட் இருவருமே விருப்பம் தெரிவித்து பிசிசிஐ-க்கு  ஷாக் அளித்துள்ளனர்.

அதிலும் ரோஹித் ஒருபடி மேலே சென்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கேப்டன் பொறுப்பு அளித்தால், அதனை ஏற்கவும் தயார் என பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்.

ADVERTISEMENT

rohit virat want to play t20

உலகக்கோப்பை டி2௦ தொடருக்காக சுமார் 30 இளம்வீரர்கள் வரை தயார் செய்து வைத்திருக்கும் இந்திய தேர்வுக்குழுவிற்கு, இவர்களின் பதில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.

இதனால் ஒரு அவசரக் கூட்டத்தினை இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விரைவில் நடத்த இருக்கிறாராம்.

மேலும் இதுதொடர்பாக விராட், ரோஹித் இருவரிடமும் பேசிய பிறகே இந்திய தேர்வுக்குழு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி2௦ தொடருக்கான இந்திய அணியினை அறிவிக்கும் என கூறப்படுகிறது.

ஒருவேளை 2024 ஐபிஎல் தொடரில் ஆடினாலே போதும் டி20 உலகக்கோப்பைக்கான பயிற்சி விராட், ரோஹித்துக்கு கிடைத்து விடும் என பிசிசிஐ கருதினால் அவர்கள் ஆப்கானிஸ்தான் டி2௦ தொடரில் சேர்க்கப்படாமலும் போகலாம்.

ஒருபுறம் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா இருவரும் முழு உடற்தகுதியை இன்னும் எட்டவில்லை. மறுபுறம் விராட், ரோஹித் இருவருமே விளையாட விரும்புகின்றனர்.

இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் தலைவலியில் பிசிசிஐ தேர்வுக்குழு சிக்கித்தவித்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

சென்னை புத்தக கண்காட்சி: மின்னம்பலம் ஸ்டால் 345

அதிமுக ஐடிவிங் கூட்டம் : எடப்பாடி நடத்திய மாஸ்டர்கிளாஸ்!

rohit virat want to play t20

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share