மிகுந்த எதிர்பார்ப்பு நிறைந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ள உள்ளன. rohit sharma replay on importance of toss
2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில், இதே நியூசிலாந்து அணியிடம் தான் இந்தியா தோல்வியடைந்த நிலையில், அதற்காக இன்றைய போட்டியில், இந்தியா பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்புடன், கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டிக்காக ஆவலாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

டாஸ் முக்கிய பங்கு வகிக்குமா?
முதலாவதாக, ’வான்கடே மைதானத்தில் டாஸ் வெல்வது எவ்வளவு அவசியம்?’ என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா,
“வெறும் 5 அல்லது 6 போட்டிகளை வைத்து, வான்கடே மைதானத்தின் நிலையை அறிந்துகொள்ள முடியாது. நான் நீங்கள் நினைப்பதை விட இங்கு அதிக அளவில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன்.
அதனால், உறுதியாக சொல்கிறேன், இந்த வான்கடே மைதானத்தில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்க டாஸ் ஒரு முக்கிய காரணியாக இருக்காது” என தெரிவித்துள்ளார்.

2019 ஒருநாள் உலகக்கோப்பை குறித்து..
“தற்போது உள்ள இந்திய அணியின் அழகு என்னவென்றால், 1983ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது, நாங்கள் பிறக்கவே இல்லை.
2011ல் நாம் உலகக்கோப்பையை கைப்பற்றியபோது, தற்போது அணியில் உள்ள பலர் கிரிக்கெட் விளையாடவே ஆரம்பிக்கவில்லை.
அதனால், நாங்கள் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விவாதிப்பதில்லை. கடந்த காலத்தில் என்ன நடந்ததோ, அது நடந்து முடிந்துவிட்டது.
நாங்கள் இன்று என்ன நடக்கும், நாளை என்ன செய்ய வேண்டும், எங்களை எப்படி மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பனவற்றின் மீதே கவனம் செலுத்தி வருகிறோம்” என ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.

ராகுல் டிராவிட்டிற்கு பாராட்டு..
இதை தொடர்ந்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிடிற்கும் தனது பாராட்டுகளை ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து, “ஒரு அணியில் சில வீரர்கள் ஒரு சில போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட எல்லை வரை அவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். அதை ராகுல் டிராவிட் சிறப்பாக செய்தார். எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்றாலும், அணியில் உடனடியே மாற்றத்தை ஏற்படுத்தாமல், வீரர்களுக்கு அவர் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கினார்”, என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் காலங்களிலும் நாங்கள் இதையே தொடர விரும்புகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணி எப்படி?
“கிரிக்கெட்டில் நியூசிலாந்து மிகவும் ஒழுக்கம் கொண்ட அணி. அவர்கள் எதிர் அணியை நன்றாக புரிந்துகொண்டு, புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாடுவார்கள்.
அவர்கள் தொடர்ந்து, அனைத்து ஐசிசி தொடர்களின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது”, என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். rohit sharma replay on importance of toss
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
சங்கரய்யா மறைவு: தலைவர்கள் இரங்கல்!
சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும்: முதல்வர்
