ஒருநாள் கிரிக்கெட்டில் ‘ரோகித் சர்மா’ புதிய சாதனை!

Published On:

| By Selvam

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த தொடரின் முதல் போட்டியில் 58 (47) ரன்கள், 2வது போட்டியில் 64 (44) ரன்கள் குவித்து, பேட்டிங்கில் அதிரடியாக செயல்பட்டுவரும் ரோகித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளார்.

தனது சிறப்பான ஆட்டத்தால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தற்போதுவரை 10,831 ரன்கள் குவித்துள்ள ரோகித் சர்மா, இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளி 4வது இடம் பிடித்துள்ளார். 10,768 ரன்களுடன் ராகுல் டிராவிட் தற்போது 5வது இடத்திற்கு சென்றுள்ளார்.

இந்த பட்டியலில், 18,426 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து விராட் கோலி 2வது இடத்தில் உள்ளார். அவர் தற்போதுவரை 13,872 ரன்கள் சேர்த்துள்ளார். 11,221 ரன்கள் சேர்ந்து சவுரவ் கங்குலி 3வது இடத்தை பிடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்து, 10,599 ரன்களுடன் எம்.எஸ்.தோனி 6வது இடத்தில் உள்ளார்.

அதேபோல, சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில், டாப் 10-க்குள் நுழைந்துள்ள ரோகித் சர்மா, தற்போது 10வது இடம் பிடித்துள்ளார்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

16 ஆண்டுகள் காத்திருப்பு… ஒலிம்பிக்கில் தங்கம் வென்று ‘ஜோகோவிக்’ வரலாறு!

ராகுல் காந்தி, கமலா ஹாரிஸ்: பிற்போக்கு தேசியம் கேட்கும் ஒற்றை அடையாளம்

டாப் 10 நியூஸ்: நெல்லை மேயர் தேர்தல் முதல் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு வரை!

கிச்சன் கீர்த்தனா: மட்டன் முருங்கைக்கீரை சூப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share