ஹர்திக் பாண்டியா – ரோஹித் சர்மா இடையிலான உரசல்கள், அந்த அணியின் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய சண்டையை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று (மார்ச் 24) குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் மும்பை அணியை குஜராத் 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Meetha Ragunath: காதலில் ‘விழுவேன்’ என நினைக்கவில்லை… வைரலாகும் ‘குட் நைட்’ நடிகையின் பதிவு!
ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்ததை, அந்த அணி ரசிகர்களால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
https://twitter.com/SelflessCricket/status/1772081667437433061
இந்தநிலையில் நேற்று போட்டி நடைபெற்ற மைதானத்தில், ஹர்திக் பாண்டியாவின் ரசிகர் ஒருவரை ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
ஒரு நபரை சுற்றி நின்று சரமாரியாக நாலைந்து பேர் தாக்கும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மும்பை அணிக்குள் தொடங்கிய உரசல், தற்போது ரசிகர்கள் மத்தியிலும் பிளவினை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”குறட்டையால் இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்பு” : மருத்துவர் ப.விஜயகிருஷ்ணன்
”ஓபிஎஸ் இரட்டை இலையை பயன்படுத்த தடை தொடரும்” : உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளியங்கிரி மலையேறிய 3 பேர் உயிரிழப்பு : வனத்துறை எச்சரிக்கை!