2019 பாபர் மசூதி தீர்ப்பு மதச்சார்பின்மைக்கு எதிரானது: முன்னாள் நீதிபதி நாரிமன்

Published On:

| By Minnambalam Login1

பாபர் மசூதி வழக்கில் 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரொஹிண்டன் நாரிமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 26வது தலைமை நீதிபதியாக பதவி வகித்த மறைந்த நீதிபதி ஏ.எம் அஹ்மதியின் நினைவு சொற்பொழிவு நேற்று (டிசம்பர் 5) நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் பத்திரிகையாளர் இன்சியா வஹன்வதி எழுதிய ஏ.எம் அஹ்மதியின் வாழ்க்கை வரலாறான ‘தி ஃபியர்லெஸ் ஜட்ஜ்’ (The Fearless Judge) வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ‘மதச்சார்பின்மையும் இந்திய அரசியலமைப்பும்’ என்ற தலைப்பில் முன்னாள் நீதிபதி நாரிமன் உரையாற்றினார்.

ADVERTISEMENT

மதச்சார்பின்மை பற்றி அவர் பேசுகையில் ” பாபர் மசூதி தொடர்பான வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மதச்சார்பின்மைக்கு நியாயம் செய்யவில்லை” என்றார்.

பாபர் மசூதி உடைக்கப்பட்ட சம்பவம் பிறகு இந்திய அரசாங்கம் எடுத்த நடவடிக்கை குறித்து பேசிய அவர் ” மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தை விசாரிக்க லிபர்ஹண் ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஆனால் இந்த ஆணையம் தனது விசாரணை அறிக்கையை 17 வருடங்கள் கழித்து 2009இல் தான் சமர்ப்பித்தது. பிறகு அயோத்தியா பகுதிகளை கையகப்படுத்தும் சட்டத்தை (1993) அமல்படுத்தியது.” என்றார்.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து அயோத்தியா பகுதிகளை கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து இஸ்மாயில் ஃபரூக்கி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் போட்ட வழக்கு, மற்றும் சில வழக்குகள் பற்றி பேசினார்.

2019 வருடம் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியலையமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பு பற்றி பேசிய அவர் ” அந்த வழக்கில் பிரச்சினைக்குள்ளான 2.77 ஏக்கர் மொத்த நிலத்தை ராமர் கோவில் கட்டுவதற்காக அளித்தது வருத்தம் அளிக்கிறது” என்றார்.

” சமீப காலமாக பல மசூதிகள் மீது இந்து அமைப்பினர் வழக்கு தொடுத்து வருவது மட்டுமல்லாமல் தர்காக்கள் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டு வருகின்றன. என்னை பொறுத்தவரை இவை சமூகத்தை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தும் அபாயம் உள்ளது.

இதை தடுப்பதற்கு ஒரே வழி தான் உள்ளது. 2019இல் வழங்கப்பட்ட பாபர் மசூதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 தான்.” என்றார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியின் போது இந்தியாவில் இருந்த மத வழிபாடு தலங்கள் எப்படி இருந்ததோ, அது எந்த விதத்திலும் மாற்றப் படக்கூடாது என்பதை தான் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 கூறுகிறது.

ஆனால் இந்த சட்டம் பாபர் மசூதிக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பொன்முடி மீது சேறு வீசியவர் திமுக காரரா?

காங்கிரஸ் எம்.பி.யின் சீட்டில் கட்டுக் கட்டாய் பணம்! நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share