ஆவணி மாத நட்சத்திர பலன்: ரோகிணி (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

By Aara

|

Published on 17 Aug 2024, 9:21 AM

–யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் எல்லாம் தெரியும் நினைவும் ஏனோதானோ செயல்பாடும் கூடாது. அனுபவம் மிக்கவர்களை மதியுங்கள். எதிர்பாராத இடமாற்றம், பொறுப்பு மாறங்கள் வந்தால் வீண் சச்சரவின்றி ஏற்பதே நல்லது.

ADVERTISEMENT

குடும்பத்தில் சீரான நன்மைகள் வரத்தொடங்கும். உறவுகள் யாரிடமும் வீண் வன்மம் வேண்டாம். பொறுமையாக இருந்தால் சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல் வாங்கலை முறைப்படுத்துங்கள். வாரிசுகளால் பெருமை உண்டு. வீண் கண்டிப்பு தவிருங்கள்.

செய்யும் தொழிலில் முழுமையான ஈடுபாடு காட்டுங்கள். புதிய முதலீடுகளை அனுபவம் மிக்கவர்கள் ஆலோச்னை கேட்டுச் செய்யுங்கள்.

ADVERTISEMENT

அரசு, அரசியல் சார்ந்தவர்கள் பொறுமையாக இருப்பதே நல்லது. கூடாநட்பை உடனே விலக்குங்கள்.

படைப்புத் துறையினர் முயற்சிகளுக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

ADVERTISEMENT

மாணவர்கள் சோம்பலை விரட்டுவது முக்கியம்.

தொலைதூரம் வாகனத்தை ஓட்டும் முன் முழுமையான ஓய்வு அவசியம்.

ஜீரண உறுப்பு, நரம்பு உபாதை, அல்சர் பிரச்னை வரலாம்.

மாருதியை வழிபட்டால், மகிழ்ச்சி உண்டாகும்.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

 

ஆவணி மாத நட்சத்திர பலன் -கிருத்திகை: (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

ஆவணி மாத நட்சத்திர பலன் -பரணி (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

ஆவணி மாத நட்சத்திர பலன்: அஸ்வினி (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

 

 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Aara

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel