அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து சர்ச்சைப் பேச்சு… டாக்டர் காந்தராஜ் மீது ரோகிணி புகார்!

Published On:

| By Kumaresan M

பிரபல மருத்துவர் காந்த ராஜ் நடிகைகள் குறித்து பல அவதூறான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.  இதையடுத்து, அவர் மீது நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி புகார் அளித்துள்ளார்.

மலையாள சினிமாவின் ஹேமா கமிட்டி விவகாரம், தமிழ் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. தமிழிலும் பல முன்னணி நடிகைகள் தொடங்கி, ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வரை பலரும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக, பேசி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம், அண்மையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்களிடம் யாரும் தகவல்களை  பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, பிரபல மருத்துவரான காந்தராஜ்  சமீபத்தில்  அளித்த பேட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் என்பது, பாலியல் பலாத்காரம் கிடையாது. ஒருவருடன் உடலுறவு கொள்ள மற்றொருவர் ஆசைப்படுகிறார் என்றால்,  அவரிடம் கேட்டால்தானே நடக்கும்.

ADVERTISEMENT

அப்படியானால், அட்ஜெஸ்மெண்ட் என்பது, இருவருக்கும் சம்மதத்துடன் நடப்பது. ஒருவர் உங்களிடம் கேட்கும்போது, நீங்கள் வேண்டாம்  இல்லை என்று சொல்லிவிட்டால், அங்கேயே அந்த விஷயம் முடிந்துவிடும் என்று கூறியிருந்தார். டாக்டர் காந்தராஜின் கருத்து பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தென்னிந்திய நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி, மருத்துவர் காந்த ராஜ் மீது சென்னை காவல் துறையினரிடம், ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

அதில் நடிகைகள் குறித்து அவதூறான மற்றும் உண்மைக்கு மாறான ஆதாரமற்ற கருத்துக்களை காந்தராஜ் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

அன்னபூர்ணா உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைப்பதா? – கொந்தளித்த கனிமொழி, ஜோதிமணி

ஆண்டுக்கு ஆயிரம் கோடி வருவாய்… தென்னிந்தியாவில் இருந்து இடம் பிடித்த ஒரே ரயில் நிலையம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share