இந்தியாவில் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்துகள்தான் சாலை விபத்துகளில் முதலிடத்தில் உள்ளது.
நேற்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சாலை விபத்துகள் மற்றும் சாலை விதிமீறல் காரணமாக வசூலிக்கப்பட்ட அபராதங்களின் தொகை விவரங்களை வெளியிட்டார்.
“கடந்த 2018ஆம் ஆண்டில் மொத்தம் 4,67,041 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் அதிக வேகத்தின் காரணமாக 3,10,612 விபத்துகளும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதன் காரணமாக 12,018 விபத்துகளும், தவறான பாதையில் வாகனத்தை ஓட்டியதால் 24,781 விபத்துகளும், சிக்னலில் சிவப்பு விளக்கில் நிற்காமல் சென்றதன் காரணமாக 4,441 விபத்துகளும், செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டியதன் காரணமாக 9,039 விபத்துகளும், இதர காரணங்களால்1,06,150 விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.
2019 ஆண்டில் அதிக வேகத்தினால் 3,19,028 விபத்துகளும், மது அருந்தி வாகனம் ஓட்டியதால் 12,256 விபத்துகளும், தவறான பாதையில் வாகனத்தை ஓட்டியதால் 24,431 விபத்துகளும், சிவப்பு விளக்கில் நிற்காமல் சென்றதால் 4,443 விபத்துகளும், செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டியதால் 10,522 விபத்துகளும், இதர காரணங்களுக்காக 78,322 விபத்துகளும் என மொத்தம் 4,49,002 சாலை விபத்துகள் நடந்துள்ளன.
அதுபோன்று 2020ஆம் ஆண்டில் அதிவேகம் காரணத்தினால் 2,65,343 விபத்துகளும், மது அருந்தி வாகனம் ஓட்டியதால் 8,355 விபத்துகளும், தவறான பாதையில் வாகனத்தை ஓட்டியதால் 20,228 விபத்துகளும், சிவப்பு விளக்கை மீறி சென்றதன் காரணமாக 2,721 விபத்துகளும், செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டியதால் 6,753 விபத்துகளும், இதர காரணங்களுக்காக 62,738 விபத்துகளும் என மொத்தம் 3,66,138 சாலை விபத்துகள் நடந்துள்ளன.
இதேபோல், புதிய சட்டத்தின் வாயிலாக, சாலை விதிகளை மீறியதற்காக நாடு முழுவதும் 1 செப்டம்பர் 2019 முதல் 31 டிசம்பர் வரை ரூ.550,73,02,804 அபராதமாகவும் 2020 ஜனவரி 1ஆம் தேதி முதல் 2020 டிசம்பர் 31 வரை ரூ.15,64,57,21,915 அபராதமாகவும், 2021 ஜனவரி 1 முதல் 2021 டிசம்பர் 31 வரை ரூ.21,04,29,52,569 அபராதமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது.
2020-21 மற்றும் 2021-22 ஆண்டுகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சுங்கச்சாவடிகளில் முறையே ரூ. 27,744 கோடி, ரூ.24,989 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளிலும் அதிவேகத்தில் வாகனங்களை இயக்கியதால் ஏற்பட்ட விபத்துகள்தான். இருப்பினும் சாலை விபத்துகள் 2019ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து குறைந்து வருவது சற்று நிம்மதி அளிக்கிறது.
**-வினிதா**
அதிவேக பயணமே சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம்!
Published On:
| By admin
admin
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
