ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!

Published On:

| By christopher

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் பயணமாக இன்று (பிப்ரவரி 19) காலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் பயணமாக இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அரசு பயணமா அல்லது சொந்த பயணமா என்பது குறித்த விளக்கம் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. எனினும் 4 நாள் பயணமாக அவர் டெல்லிக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுவதற்கு முன்னதாக கடந்த 4ஆம் தேதி மூன்றுநாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று திரும்பினார்.

ADVERTISEMENT

அதனைத்தொடர்ந்து கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்றார். ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவையில், நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன என்றும் கூறி அரசின் உரையை புறக்கணித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில், திடீர் பயணமாக அவர் இன்று காலை டெல்லி புறப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

பூண்டு திருட்டு: புதிய யுக்தியை கையாளும் விவசாயிகள்!

காவலர்களுக்கான பதவி உயர்வு: பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட அன்புமணி வலியுறுத்தல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share