‘ஆர் எம் வீ தி கிங்மேக்கர்’ ட்ரெய்லர்… ஸ்பெஷல் என்ன?

Published On:

| By uthay Padagalingam

rmv the kingmaker trailer

தமிழ்நாட்டு மக்களின் மனம் கவர்ந்த சினிமா, அரசியல் ஆளுமைகளில் முதன்மையானவராகத் திகழ்ந்தவர் ஆர்.எம்.வீரப்பன். rmv the kingmaker trailer

ஒரு அரசியல்வாதியாக எந்தளவுக்குப் பங்களித்திருக்கிறாரோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் திரையுலகில் பல மாற்றங்களின் பின்னிருந்திருக்கிறார்.

எம்ஜிஆரின் அரசியல் வாழ்வு மட்டுமல்லாமல், அவரது திரையுலகப் பயணத்தின் பல்வேறு நிலைகளில் அவருடன் துணை நின்றவர் ஆர்.எம்.வீ. இப்படிப் பல பிரபலங்கள் தனித்தனியாக நினைவுகூர்ந்ததை நாம் கண்டிருக்கிறோம், கேட்டிருக்கிறோம். அவர்களது குரல்கள் ஒரே கற்றையாகத் தொகுக்கப்பட்டால் எப்படியிருக்கும்?

rmv the kingmaker trailer

இந்த சிந்தனையோடு உருவாக்கப்பட்டு வருகிறது ‘தி கிங்மேக்கர்’ ஆவணப்படம். சத்யா மூவிஸ் நிறுவனத்தின் அறுபதாம் ஆண்டு கொண்டாட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில் இது வெளியாகிறது.

ஆர்.எம்.வீரப்பன் தொடர்பான திரையுலக அனுபவங்களை, அவர் குறித்த தனிப்பட்ட தகவல்களை, அவருடன் இணைந்து பணியாற்றிய பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த ஆவணப்படம் குறித்த அறிவிப்பு எட்டு மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இதன் முன்னோட்டமும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இதன் ட்ரெய்லர் இப்போது வெளியாகியிருக்கிறது.

தங்கராஜ் வீரப்பன் தயாரிப்பில், பினு சுப்பிரமண்யம் இயக்கியிருக்கிற இந்த ஆவணத் திரைப்படத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழிசை சௌந்தரராஜன், ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, சரத்குமார், சத்யராஜ், கவிஞர் வைரமுத்து, விஞ்ஞானி நம்பி நாராயணன் உட்படப் பல அரசியல், திரையுலகப் பிரபலங்கள் ஆர்.எம்.வீ குறித்த தங்களது கருத்துகளைப் பகிர்ந்திருப்பதைக் காட்டுகிறது ட்ரெய்லர். கூடவே, ஆர்.எம்.வீ பங்கேற்ற நிகழ்வுகளின் காட்சிப்பதிவுகளும் இதில் இருக்கும் என்பது தெளிவாகிறது.  

தமிழ்நாட்டின் அரசியல், சினிமா வரலாற்றில் தடம் பதித்த பல ஆளுமைகளைப் பற்றிப் பேசும் என்பதும் புலனாகிறது.

‘தி கிங்மேக்கர்’ வெளியாகும்போது, இப்போது கிடைத்து வரும் வரவேற்பு பன்மடங்காகலாம் என்பதையும் உணர்த்துகிறது இந்த ட்ரெய்லர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share