பட ப்ரமோஷன்களில் எஸ்கேப்… நடிகர்களுக்கு ஆர்.கே.செல்வமணி செக்!

Published On:

| By Selvam

பட புரமோஷனுக்கு நடிகர்கள் ஒத்துழைக்காவிட்டால் இனிமேல் அவர்களை வைத்து படம் பண்ண மாட்டோம் என்று முடிவு செய்யுங்கள் என ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

எமக்குத் தொழில் ரொமான்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அப்படத்தின் கதாநாயகன் அசோக் செல்வன், நாயகி அவந்திகா இருவரும் வரவில்லை.

ADVERTISEMENT

இந்நிகழ்வில் பங்கேற்க பணம் தருவதாக கூறியும் அசோக் செல்வன் நேரம் ஒதுக்கி கொடுக்கவில்லை என படத்தின் தயாரிப்பாளர் திருமலை ஆதங்கத்துடன் பேசினார்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் பேசிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி,

“ஒரு குழந்தையின் டெலிவரியை போல ஒவ்வொரு படமும் வெளிவருவது ரொம்ப கஷ்டம். ஒரு படத்தை தயாரிப்பது உண்மையில் கஷ்டம் தான்.ஆனால், அதனை முன்கூட்டியே திட்டமிட்டு செய்தால் சிரமம் இருக்காது. எனது இயக்கத்தில் படம் ரிலீஸ் ஆகும் போது ரொம்ப பாராட்டினாங்க. ஆனால் அதுக்கு முன்னாடி என்னை பேசிய பேச்சு கொஞ்சம் நஞ்சமில்லை. சினிமாவில் எதுவும் நடக்கும்.

ADVERTISEMENT

அசோக் செல்வனும் ரொம்ப நாகரிகமான, பண்பான மனிதர் தான். மேலும், படத்தின் வெற்றியால் 80 சதவிகிதம் லாபமடைகின்றனர் திரைக்கலைஞர்கள். ஆனால் 5 முதல் 10 சதவீதம் லாபம் பெறும் தயாரிப்பாளர் புரமோஷனுக்கு ஒர்க் பண்ணும் போது 90 சதவீதம் வரை லாபம் பெறும் நடிகர், நடிகைகள்ஏன் அதை செய்வதில்லை?

இன்றைக்கு சிறிய படங்களுக்கு யாரும் கடன் கொடுக்க தயாராக இல்லை. தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து சரியான வழிமுறைகளைக் கொண்டு வந்தால் தேவையில்லாத பிரச்னை வராமல் இருக்கும்.‌ இதை பின்பற்றினால் 60 முதல் 80 சதவீதம் தமிழ் சினிமா மாறுபடும். வருமானம் வரும்.‌ நான் வாங்கிய பாடலை ஒரு மேடையில் நான் பயன்படுத்த, பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. பல வழிகளில் வருமானம் வருகிறது. ஆனால், தயாரிப்பாளருக்கு வருமானம் இல்லை.

தயாரிப்பாளர் சங்கத்திற்காக மட்டும் நான் பேசவில்லை. தமிழ் சினிமாவுக்காக பேசுகிறேன். இது ஒரு வீடு. மொத்த தமிழ் சினிமாவும் இணைந்து செயல்பட்டால் இந்த வீட்டில் இயக்குநர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், பணியாளர்கள் என அனைவரும் நன்றாக இருக்கலாம்.

பட புரமோஷனுக்கு நடிகர்கள் ஒத்துழைக்காவிட்டால் இனிமேல் அவர்களை வைத்து படம் தயாரிக்கமாட்டோம் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள். உங்கள் முயற்சிக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் துணையாக இருக்கும்.  தயாரிப்பு துறை நன்றாக இருந்தால் தான் திரையுலகம் நன்றாக இருக்கும்” என்று பேசினார்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு உதவி… தங்கம் தென்னரசு உறுதி!

“போட்”… ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தது ஏன்? சிம்புதேவன் நச் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share