நான் நேரில் பார்த்த “ஜாவா சுந்தரேசன்” மீனாட்சி சவுத்ரி: கலாய்த்த ஆர்.ஜே.பாலாஜி

Published On:

| By christopher

RJ Balaji Speech in Singapore salon trailer launch

’எல்.கே.ஜி’, ’மூக்குத்தி அம்மன்’, ’வீட்டுல விசேஷம்’ போன்ற வெற்றி படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை ஹீரோவாக நிரூபித்து காட்டியவர் ஆர்.ஜே.பாலாஜி.

தற்போது இவரது நடிப்பில் கோகுல் இயக்கத்தில் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ’சிங்கப்பூர் சலூன்’. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் டிரைலர் லான்ச் விழாவில் நடிகர்கள் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், ஜான் விஜய், தலைவாசல் விஜய், ரோபோ சங்கர், இயக்குனர் கோகுல், சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி மற்றும் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடித்திருக்கும் மீனாட்சி சவுத்ரி இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இந்த விழாவின் மேடையில் படம் குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சவுத்ரி இந்த விழாவில் கலந்து கொள்ளாததையும் குறிப்பிட்டு நகைச்சுவையாக பேசி இருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த விழாவில் ஆர்.ஜே.பாலாஜி கூறியதாவது, ”இந்த படத்தில் எனக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி என்பவர் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் கமிட்டாவதற்கு முன்பாக ’கொலை’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே அவர் நடித்திருந்தார்.

இன்று அவரால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்கு காரணம் G.O.A.T படத்தில் தளபதி விஜய் உடன் பிஸியாக அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நான் நேரில் பார்த்த ’ஜாவா சுந்தரேசன்’ மீனாட்சி சவுத்ரி. அவரது சினிமா வாழ்க்கை சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் என்று தனது பாணியில் நகைச்சுவையாக மீனாட்சி சவுத்ரிக்கு ஆர்.ஜே.பாலாஜி வாழ்த்து தெரிவித்தார்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் டிரெய்லர் சொல்வதென்ன?

மோடி வருகை : சென்னை போக்குவரத்து அதிரடி மாற்றம்!

வேலைவாய்ப்பு : உயர் நீதிமன்றத்தில் பணி!

பொதுப் பயன்பாட்டு மின்கட்டணத்தை எப்போது குறைப்பீர்கள்? : அன்புமணி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share