மாணவர்களுக்கு ஆர்.ஜே. பாலாஜி அட்வைஸ்

Published On:

| By admin

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று வெளியானதை ஒட்டி, பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை சொல்லி வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

அந்த வீடியோவில், “தம்பி தங்கைகள் அனைவருக்கும் வணக்கம்! இன்று பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

ADVERTISEMENT

இன்று என்னுடைய பிறந்த நாளும் கூட! என்னுடைய பிறந்த நாளுக்காக வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது என்றவுடன் உங்களிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. பொதுவாக இந்த பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் தான் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிறது என்றெல்லாம் நம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், பள்ளிக்கூடத்தில் என எல்லா பக்கமும் சொல்வார்கள்.

ஆனால் அதையெல்லாம் மீறி, தான் எடுத்த மதிப்பெண்கள் திருப்தியாக இருக்கிறது என மகிழ்ச்சியடையும் எல்லாத் தம்பி தங்கைகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். ஆனால் அதே சமயத்தில் நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறாமல் அல்லது குறைந்த மதிப்பெண்களை அல்லது ஏதாவது ஒரு பாடத்தில் தோல்வி அடைந்து விட்டாலோ உங்கள் வாழ்க்கையை அதோடு முடிந்துவிட்டது என்று யாராவது சொன்னால் அவர்கள் முகத்திலேயே ஓங்கி ஒரு குத்து விடுங்கள்.

ADVERTISEMENT

ஏனெனில் 12-வது வகுப்பு மதிப்பெண்கள் தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்று என்பது உண்மையெனில் பலருக்கும் இங்கே வாழ்க்கையை இருந்திருக்காது.
இதற்கான ஒரு சிறந்த உதாரணம் நான்தான். 2002இல் என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் வந்தபோது கணக்கில் நான் 40 மதிப்பெண்கள் எடுத்து தோல்வியடைந்து இருந்தேன். 200க்கு 70 மதிப்பெண்கள் எடுத்தால் தான் அப்பொழுது பாஸ் என்று வைத்திருந்தார்கள்.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாது வாழ்க்கை அதோடு முடிந்துவிட்டது என்று என் குடும்பத்தில் யாரும் என்னை கீழே தள்ளி விடாமல் எனக்கு நம்பிக்கை கொடுத்தார்கள். அதனால்தான் இந்த நல்ல நிலைமையில் நான் இருக்கிறேன்.

ADVERTISEMENT

பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு வாழ்க்கை இன்னும் பெரிது என எனது குடும்பம் உணர வைத்தது. அதனால் இந்த காணொளியை அம்மா, அப்பா யாராவது பார்த்துக் கொண்டிருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கை இன்னும் இருக்கிறது என்பதை புரிய வையுங்கள். மதிப்பெண்கள் மட்டுமே அவர்கள் எதிர்காலத்தை நிச்சயம் தீர்மானிக்காது. எத்தனை மதிப்பெண்கள் எடுத்தாலும் இன்று ஏராளமான படிப்புகள் இருக்கின்றன. அதனால் எதை பற்றியும் கவலைப்படாமல் கொஞ்சம் ஆராய்ந்து உங்களுக்கு பிடித்த நல்ல படிப்பை தேர்ந்தெடுத்து படியுங்கள்.

200 வருடங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். இன்றைய நாள் என்பது இன்றோடு முடிந்து விட்டது” என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் ஆர். ஜே. பாலாஜி.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share