தயாராகும் ’காந்தாரா 2’!

Published On:

| By Kavi

இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த படம் ‘காந்தாரா’.

2022 செப்டம்பர் 30ஆம் தேதி கன்னடத்தில் வெளியானது. மொழி கடந்து இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்புக்கு உள்ளானது.

ADVERTISEMENT

தென்னிந்தியா முழுவதும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான” பொன்னியின் செல்வன்” தாக்கம் இருந்தபோதும் காந்தாரா படம் பற்றிய விமர்சனங்கள், பாராட்டுகள் சமூக வலைதளம், மற்றும் ஊடகங்களில் பொங்கிவழிந்தது.

அதனால் தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டது

ADVERTISEMENT

 ரூ.16 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ.450 கோடி வரை வசூலித்து  சாதனையை படைத்தது.இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார் ‘காந்தாரா’ படத்தை தயாரித்த ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்.

ADVERTISEMENT

அவர் அளித்த பேட்டியில், “ரிஷப் ஷெட்டி காந்தாரா 2 படத்துக்கான கதையை எழுதி வருகிறார். இரண்டாம் பாகத்திற்காக கடந்த இரண்டு மாதங்களாக கர்நாடக மாநில காடுகளுக்குச் சென்று ஆராய்ச்சி நடத்தியும் வருகிறார்.

முதல்கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இரண்டாம் பாகம் வெளியாகலாம். ஆனால், இது காந்தாரா படத்தின் சீக்குவல் (sequel) கிடையாது.

மாறாக ப்ரீக்குவலாக (prequel) இருக்கும். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அதிக பொருட்செலவில் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இராமானுஜம்

தமிழ்நாட்டில் பணியாற்றுவது எனக்கு ஒரு பாடம்: ஆளுநர் ஆர்.என். ரவி

ஈரோடு கிழக்கு: களமிறங்கும் ‘நாம் தமிழர்’!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share