அடுத்தடுத்து சதம்… ரிஷப் பந்த் வரலாற்று சாதனை!

Published On:

| By christopher

rishab pant massive record with 2nd innings 100

லீட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கே.எல். ராகுல் 9வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்தும் அதிரடியாக 8வது சதத்தை பதிவு செய்தார். rishab pant massive record with 2nd innings 100

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது.

கடந்த 20ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 465 ரன் குவித்தது.

இதனையடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் நேற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் குவித்தது. களத்தில் கேஎல் ராகுல் (46) மற்றும் சுப்மன் கில் (4) இருந்தனர்.

நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சிறிது நேரத்தில் 8 ரன்களில் கில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். எனினும் 4வது விக்கெட்டுக்கு இணைந்த கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

முதல் செஷனில் நிதானமாக ஆடிய இருவரும் 13.1 ஓவரில் 28 ரன்கள் மட்டுமே குவித்தனர்.

அதன்பின்னர் பொறுத்தது போதும் பொங்கி எழு என அதிரடியாக ஆடி வேகமாக ரன் குவிக்க ஆரம்பித்தார் பந்த்.

மறுபக்கம் தொடர்ந்து நிதான ஆட்டத்தை கடைபிடித்த ராகுல் 202 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 100 ரன்களை எட்டினார். டெஸ்ட் போட்டியில் இது அவரது 9வது சதம் ஆகும்.

அதற்கடுத்த சில நிமிடங்களில் அதிரடியாக ஆடி வந்த ரிஷ்ப் பந்தும், முதல் இன்னிங்ஸை போலவே சோயிப் பஷிர் பந்தில் சதம் அடித்தார். இதன்மூலம் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை பந்த் படைத்தார்.

மேலும் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த 7வது இந்திய வீரர் என்ற பெருமையையும், இங்கிலாந்து மண்ணில் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ஒரு சேர பந்த் பெற்றார்.

சதமடித்த பிறகு மீண்டும் பீஸ்ட் மோடிற்கு மாறிய அவர், 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 118 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தற்போது ராகுல் மற்றும் கருண் நாயர் களத்தில் இருக்க, இந்திய அணி 297 ரன்கள் குவித்து 303 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து விளையாடி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share