இது ராம் லீலா இல்லை, ‘ராம் in லீலா’

Published On:

| By Minnambalam Desk

Ram in Leela Movie Pooja

ஸ்டார் விஜய் டிவியில் வந்த கனாக் காணும் காலங்கள் தொடரின் மூலம் 2011 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகம் ஆனவர் ரியோ ராஜ். அப்புறம் சன் டிவியில் நிகழ்ச்சி நடத்துனர் ஆகி, கல்லூரிக் காலம், சுடச் சுடச் சென்னை, ஃ ப்ரீயா விடு. போன்ற நிகழ்சசிகளை நடத்தியவர். மீண்டும் விஜய் டிவிக்கு வந்து சரவணன் மீனாட்சி தொடரில் பிரதான வேடத்தில் நடித்து புகழ் பெற்றார்.

2017 ஆம் ஆண்டு வெளிவந்த சத்ரியன் படத்தில் ( விஜயகாந்த் படம் அல்ல) விக்ரம் பிரபுவின் நண்பராக வெள்ளித் திரைக்கு வந்தார். சிவகார்த்திகேயன் தயாரித்த “நெஞ்சம் உண்டு நேர்மை” உண்டு படத்தில் ஹீரோவானார். படம் இருந்தது. வரவேற்பு இல்லை. அடுத்து நடித்த பிளான் பண்ணி பண்ணனும் படமும் எந்த பிளானும் செய்யவில்லை.

ADVERTISEMENT

பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்து கொண்டும் பலன் இல்லை. அடுத்து நடித்த புரோக்கன் ஸ்கிரிப்ட் என்ற படமும் பிரேக் தரவில்லை. ஜோ படத்தின் மூலம் கொஞ்சம் வெளியே தெரிய வந்தவருக்கு மீண்டும் நிறம் மாறும் உலகில், சுவீட் ஹார்ட் போன்ற படங்களும் கசப்பு மருந்தையே தந்தன.

அடுத்து அவர் நடித்த ஆண்பாவம் பொல்லாதது படம் ஹிட். அவ்வளவுதான் ரியோ ராஜ் வளரும் ஹீரோ ஆகி விட்டார்.

ADVERTISEMENT
Ram in Leela Movie Pooja

டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஐவா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘ராம் in லீலா’

இந்தப் படத்தில் ரியோ கதாநாயகனாக ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

ADVERTISEMENT

இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் வர்திகா, நயனா எல்சா, மா. கா. பா. ஆனந்த், சேத்தன், முனீஸ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், சண்டை பயிற்சி இயக்குநர் சூப்பர் சுப்பராயன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைக்கிறார். சஞ்ஜெய் விஜய்ராகவன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றும் இந்த திரைப்படம்.

படத்தின் பூஜையில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு வாழ்த்தி இருக்கிறார். அப்போ ரியோ கவனிக்கப்படும் ஹீரோ தானே?

“சமகால பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் புத்துணர்ச்சியூட்டும் உருவாக்குகிறோம் என்கிறது படக்குழு.

“ராம் in லீலா” ராம லீலாவாக இல்லாவிட்டாலும் காம லீலாவாக இல்லாமல் இருக்கட்டும்.

கிருஷ்ணலீலார்ப்பணம்!

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share