ஏபிவிபி-யினரின் அடுத்த குறி, அலகாபாத் பல்கலைக்கழகத்தின் மாணவத் தலைவர் ரிச்சா சிங்-தான் என்பதாக பேசப்பட்டது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது. அப்போது, உத்திரப்பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சியும், எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் ரிச்சா சிங்கை ஆதரித்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை பெண்களுக்கான ராணி லட்சுமிராய் வீரதீர விருது வழங்கும் விழா உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்றது. அந்த விருதில், ரிச்சா சிங்-கின் பெயர் இல்லை. ஆனால், அகிலேஷ் யாதவின் அரசு, அவரது பெயரை கடைசி நேரத்தில்தான் சேர்த்தது. உடனடியாக, அவரைத் தொடர்பு கொண்டு மாலை லக்னோவில் நடைபெறும் விருது நிகழ்ச்சிக்கு அழைத்தனர். முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் இவருக்கு விருது அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.