FAST 8 படம் பார்ப்பதற்கு முன் தெரிய வேண்டியவை!

Published On:

| By Balaji

Fast And The Furious திரைப்பட வரிசையில் தனது எட்டாவது படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். வசூலில், ஏழாவது பாகத்தினை சுலபமாக மிஞ்சும் என்பது அதன் முன்பதிவிலேயே தெரிந்துவிட்டது. சீனாவில் அதிகபட்சமாக முன்பதிவில் 45 மில்லியன் டாலர்களை எடுத்து தனது சக்தியைக் காட்டியது FAST 8 திரைப்படம். ஆனால், இந்தச் சாதனைகளைவிட இந்த ஏழு திரைப்படங்களை எடுப்பதற்குள் அழித்த பொருள்களின் மதிப்பிலும் சாதனை படைத்திருக்கிறது FAST 8.

ஏழு பாகங்களிலும் சேர்த்து இதுவரையிலும் 311 கார்களை சேதப்படுத்தி அல்லது அழித்திருக்கிறது FAST டீம். தனி நபரால் அதிக சேதம் ஏற்படுத்தியதில் ஆறாவது பாகத்தில் அறிமுகமான ஜேசன் ஸ்டேதம் 182.4 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருள்களை அழித்து முதலிடத்தில் இருக்கிறார். மொத்தமாக இதுவரை இந்தப் படங்களுக்காக 84 பில்டிங்குகளை அழித்திருக்கிறார்கள். இதில் அதிகம் அழிக்கப்பட்டது ஜேசன் ஸ்டேதம் இடம்பெற்ற ஆறாவது பாகத்தில்தான். அதன் க்ளைமேக்ஸ் காட்சியில் தரைமட்டமாக்கிய பில்டிங் முதலிடத்தில் இருக்கிறது. Fast And The Furious படங்களில் இதுவரை 23 ரேஸ்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் 311 முறை கியர் மாற்றப்பட்டிருக்கிறது. 174 முறை கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள். இதில் அதிக வார்த்தைகளைப் பயன்படுத்தியவர் டைரீஸ் கிப்சன்.

கார்களைத் தரையில் ஓட்டுகிறார்களா? காற்றில் ஓட்டுகிறார்களா? என வியக்கும் விதத்தில், படங்களில் கார்கள் பறக்கும் நேரம் மட்டுமே 80 நிமிடங்கள் இருக்கின்றன. இதை வைத்தே தனியாக ஒரு படத்தை எடுக்கலாம். ஐந்தாவது பாகத்தில் அதிக கட்டிப்பிடி வைத்தியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இத்தனை சாதனைகளைப் படைத்திருக்கும் Fast And The Furious-ன் ஏழு படங்களின் பட்ஜெட்களையும் சேர்த்தால் 759 மில்லியன் டாலர்கள் வருகிறது.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share