தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் முதன்மை சக்தியாக மாறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியுள்ளார். revolution 2026 like 1967 and 1977 vijay speech
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று (பிப்ரவரி 26) மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.
இதில் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மற்றும் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கட்சித் தலைவர் விஜய், “1967, 1977 சட்டமன்ற தேர்தல்களை போல 2026ல் புரட்சி நடக்கும். தவெகதான் முதன்மையான சக்தி” என்று தெரிவித்தார்.
ஒரு சிலருக்கு எரிச்சல் வரும்! revolution 2026 like 1967 and 1977 vijay speech
தொடர்ந்து பேசிய அவர், “இந்த அரசியல் என்றாலே வேற லெவல் தான். அரசியலில் மட்டும்தான் வித்தியாசமான ஒன்றை பார்க்கலாம். யார் யாரை எப்போது எதிர்ப்பார்கள், ஆதரிப்பார்கள் என்றே தெரியாது. அதை கணிக்கவே முடியாது. அரசியலில் நிரந்திர நண்பரும், நிரந்திர எதிரியும் கிடையாது.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதுவொரு ஜனநாயக உரிமை என்று சொல்வார்கள். ஆனால் மக்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு போன ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அதை நல்லவர்கள் வரவேற்பார்கள். ஆனால் ஒரு சில இந்த அதிகார…. இல்லை அது வேண்டாம். ஒருசில பேருக்கு மட்டும் எரிச்சல் வரத்தானே செய்யும். அது இருக்கும் தானே…
’என்னடா இவன் திடீரென ஒருத்தன் என்ட்ரி கொடுத்துட்டானே, இதுவரை நாம் சொன்னதெல்லாம் நம்பிக்கொண்டு மக்கள் ஓட்டு போட்டுக்கொண்டிருந்தார்களே. ஆனால் இப்போது இவன் வந்து சொல்வதை பார்த்தால் மக்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறதே… அதுவே நமக்கு மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கிறதே, என்ன செய்யலாம், எப்படி செய்யலாம், எப்படி க்ளோஸ் பண்ணலாம் என்றெல்லாம் கன்ஃபூசன் வரும்.
அந்த குழப்பத்தில் கத்துவதா, கதறுவதா என தெரியாமல் வரவன் போறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறான்’ என்று பேச ஆரம்பிப்பாங்கள். இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் நம்மை பற்றி பேசுகிறார்கள் இல்லையா?. அது மாதிரி.
தவெக பண்ணையார்களுக்கான கட்சியல்ல! revolution 2026 like 1967 and 1977 vijay speech
இப்படிப்பட்ட அரசியல் களத்தில் கொஞ்சம் கூட பயம் இல்லாம, வருகிற எதிர்ப்பை எல்லாம் லெப்ஃட் ஹாண்டில் டீல் செய்துகொண்டு, இதோ தமிழக வெற்றிக் கழகம் முதலாம் ஆண்டை கடந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
இது மிக முக்கியமான காலக்கட்டம். ஒரு அரசியல் கட்சிக்கு பலமே அந்த கட்சியின் கட்டமைப்புதான். அதுதான் கட்சியின் வேர்தான். ஒரு கட்சி ஆலமரம் போல் வளர வேண்டும் என்றால். அதன் விழுதுகளும் , வேர்களும் வலுவாக இருக்க வேண்டும். அப்படிதான் நமது அமைப்பை பலபடுத்தும் வேலையை செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நிர்வாகிகளை எல்லாம் தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறோம். இப்படிபட்ட நேரத்தில் நமது மேல் ஒரு புகார் வருகிறது. அதுதான் எனக்கு புரியவில்லை.
நமது மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் இளைஞர்களாகவே இருக்கிறார்களாம். ஏன் இருந்தால் என்ன?. அண்ணா கட்சி ஆரம்பித்த போது அவர் பின்னால் நின்றதும், எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த போது அவர் பின்னால் நின்றதும் வெறும் இளைஞர்கள் தான். அந்த இளைஞர்களால் தான் 1967லிலும், 1977லிலும் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அதுதான் வரலாறு.
நமது மேல் இன்னொரு கம்ப்ளைண்ட் வருகிறது. தவெக நிர்வாகிகள் எல்லாருமே சாதாரண குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அதையேதான் இங்கும் கேட்கிறேன்… ஏன் வரக்கூடாதா? சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் நிறைய சாதித்திருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் நம்முடைய கட்சி ஏழை எளிய மக்களுக்கான கட்சிதானே. அப்படி இருக்கும் போது நம்முடைய கட்சி நிர்வாகிகளும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
நம்முடைய கட்சி பண்ணையார்களுக்கான கட்சியல்ல. அந்த காலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். இப்போது எல்லாம் உல்ட்டாவாக மாறுகிறது. பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையார்களாக மாறுகிறார்கள்.
மக்களுடைய நலனை பற்றியோ, நாட்டை பற்றியோ, வளர்ச்சியை பற்றியோ கவலைப்படாமல்… பணம், பணம், பணம் என எந்த வழிகளில் வருகிறது என்று பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதான் நமது முதல் வேலை.
விரைவில் பூத் கமிட்டி மாநாடு! revolution 2026 like 1967 and 1977 vijay speech
அதை ஜனநாயக முறைப்படி செய்ய 2026ல் தேர்தலை சந்திக்க போகிறோம். இதற்கு மிகவும் முக்கியமாக விஷயம் பூத் லெவல் ஏஜெண்ட்(பிஎல்ஏ). தமிழ்நாட்டில் பெரிய பெரிய கட்சிகளுக்கு எல்லாம் பிஎல்ஏ வலுவாக இருக்கிறது என்று சொல்வார்கள்.
சராசரியாக 69,000 பூத்துகள் உள்ளன. அது எல்லாவற்றுக்கு பூத் ஏஜெண்ட்டா தவெகவினரை மட்டுமே நியமிக்க போகிறோம். விரைவில் பூத் கமிட்டி மாநாடு ஒன்றை நடத்த போகிறோம். அன்று தமிழக வெற்றிக் கழகம் எந்த கட்சிக்கும் கொஞ்சம் கூட சளைத்தது அல்ல என்று தெரியும்.
தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் முதல், முதன்மை சக்தியாக இருக்கிறது என்று நிரூபணமாகும்” என சூளுரைத்தார். revolution 2026 like 1967 and 1977 vijay speech