வாடிக்கையாளர்களை ஈர்க்க ரிவோல்ட்டின் புதிய முயற்சி!

Published On:

| By Jegadeesh

Revolt RV400 now available

மக்களின் தினசரி வாழ்க்கையில் ஆன்லைன் ஷாப்பிங் வகிக்கும் பங்கு அளப்பரியதாக மாறி வருகிறது. உணவில் தொடங்கி மளிகை பொருட்கள், ஆடைகள், ஃபேஷன் நகைகள் என பல்வகை பொருட்களும் இருக்கும் இடத்திலிருந்தே ஒரே தட்டில் வேண்டியதை தேடி வர வைக்கும் அளவுக்கு உலகம் மிகப்பெரிய மாற்றத்தை கண்டிருக்கிறது.

ஆன்லைன் வர்த்தகம் இல்லாத நாளை எவராலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதன் வணிகமும் ஒரு சேர அதிகரித்த வண்ணமே இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பதுதான் ஆன்லைன் வாகன விற்பனை.

அது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழலாம். நவீன உலகில் எதுவும் சாத்தியமே என்பதை இந்தியாவின் பிரதான ஆன்லைன் தளமான ஃப்ளிப்கார்ட் மெய்ப்பித்திருக்கிறது.

ரத்தன் இந்தியா நிறுவனத்தின் ரிவோல்ட் மோட்டார்ஸ் 2019ஆம் ஆண்டு முதல் எலக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் இருந்து வருகிறது. இதற்கென இணையதளம் மற்றும் ஷோரூம்கள் இருந்தாலும் மக்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை.

Revolt RV400 electric motorcycle deliveries commence in India - BikeWale

ரிவோல்ட் மோட்டர்ஸின் முதல் எலக்ட்ரிக் இருசக்கர வாகனமான ரிவோல்ட் ஆர்வி 400 அறிமுகப்படுத்தப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆன போதிலும் வாடிக்கையாளை சரியாக சென்று சேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நகரத்தை தாண்டி வசிக்கும் மக்களுக்கு இந்த இருசக்கர வாகனம் கிடைப்பதில் சில சிக்கல்கள் இருந்து வந்தன, சரியான நேரத்தில் இருசக்கர வாகனம் கிடைக்காமல் மாத கணக்கில் காத்திருக்க வேண்டி இருந்தது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரிவோல்ட் மோட்டர்ஸ் தனது தயாரிப்பான ரிவோல்ட் ஆர்வி 400 என்ற எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை சில அப்டேட்களுடன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இதற்காகவே ரத்தன் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் கூட்டணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ள ரிவோல்ட் ஆர்வி 400 வாகனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பார்க்கலாம்,

1.நிறம்:மிஸ்டு கிரே, ரெபெல் ரெட் மற்றும் காஸ்மிக் பிளாக்
2.ஷோரூம் விலையான ரூ.1,54,950ல் இருந்து பத்து சதவிகித தள்ளுபடியில் ப்ளிப்கார்ட்டில் 1,38,950 ரூபாய்க்கும் விற்பனை (குறிப்பிட்ட டெபிட் மற்றும் கிரெடிக் கார்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடி உண்டு)
3.மாதத்தவணை ரூ.11,580ல் இருந்து ஆரம்பம்
4.ரேஞ்ச்: 150கிமீ
5. அதிகபட்ச வேகம்: 85 km/hr
6.சார்ஜிங் டைம்: 4.5 hr
7. பேட்டரி பவர்: 3.24 kwh
8. கன்ட்சோல் ஃபீச்சர்: டிஜிட்டல்
9. சக்கரம் : ட்யூப்லெஸ் டயர்
10. வாரண்டி: 3 வருடம் அல்லது 40,000கிமீ

ப்ளிப்கார்ட்டை தொடர்ந்து அமேசான் தளத்திலும் 7 சதவிகித தள்ளுபடியுடன் ரூ.1,44,450க்கு விற்பனைக்கு வந்துள்ளது. மாதத்தவணை 6,935ல் இருந்து தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு தளங்களுமே ரிவோல்ட் ஆர்வி 400 எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை ஆடர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டெலிவிரி செய்கிறது.

பவித்ரா பலராமன்

டி.எம்.சௌந்தரராஜன் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்

10 ஆயிரம் மின்சார பேருந்துகள்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share