கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமாருக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என்பதை காங்கிரஸ் மேலிடத்திடம் வலியுறுத்த அவரது ஆதரவு 11 எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அப்போது முதல்வர் பதவி யாருக்கு என்பதில் சித்தராமையா, டிகே சிவகுமார் இடையே போட்டி ஏற்பட்டது.
இதனால் சித்தராமையா, முதல் இரண்டரை ஆண்டுகளும் அதற்கு அடுத்து டிகே சிவகுமாரும் முதல்வர் பதவி வகிக்கலாம் என காங்கிரஸ் மேலிடம் சமாதானம் செய்து வைத்தது. இதனை சித்தராமையா- டிகே சிவகுமார் ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் சித்தராமையா முதல்வராகி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டதால் டிகே சிவகுமாரிடம் முதல்வர் பதவியை ஒப்படைக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் சித்தராமையாவும் அவரது ஆதரவாளர்களும் முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்கின்றனர்.
இந்த நிலையில் டிகே சிவகுமாரின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 11 பேர் டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். இவர்களில் 2 பேர் அமைச்சர்கள்.
அமைச்சர்கள் செலுவராயசாமி
சிவானந்த் பட்டீல்
எம்.எல்.ஏ.க்கள்
எஸ்.ஆர். சீனிவாஸ்
சிவண்ணா
ரங்கநாத்
ரவிக்குமார்
எச்.சி. பாலகிருஷ்ணா ராஜேகௌடா
இக்பால் உசேன்
சிவகங்கா பசவராஜ்
சீனிவாஸ் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
டெல்லியில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் உள்ளிட்டோரை சந்தித்து டிகே சிவகுமாருக்கு முதல்வர் பதவி தர வலியுறுத்த உள்ளனர்.
