தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று (டிசம்பர் 7) பதவியேற்றுக்கொண்டார்.
தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 64 இடங்களை கைப்பற்றி முதல்முறையாக ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக தெலங்கானா காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தநிலையில், ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் மைதானத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ரேவந்த் ரெட்டிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து பட்டி விக்ரமா துணை முதல்வராகவும், 11 புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை மீண்டு வர அனைத்து உதவிகளும் செய்யப்படும்: ராஜ்நாத் சிங்
நிவாரண நிதி: முதல்வர் கேட்டது எவ்வளவு? பிரதமர் அறிவித்தது எவ்வளவு?