பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் இறுதியில், மே தொடக்கத்தில் பல புதிய படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். retro tourist family hit 3 who get high collection
அதன்படி இந்த ஆண்டு மே தினத்தை முன்னிட்டு கடந்த 1ஆம் தேதி சூர்யாவின் ’ரெட்ரோ’, சசிகுமாரின் ’டூரிஸ்ட் ஃபேமிலி’ மற்றும் நானியின் ’ஹிட் 3’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின.
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களில் இப்படங்கள் குவித்த வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

ரெட்ரோ : retro tourist family hit 3 who get high collection
கங்குவா பட தோல்விக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்து சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பலர் நடித்துள்ளனர்.
முதல் காட்சி முதலே கலவையான விமர்சனங்களை பெற்ற இத்திரைப்படம் முதல்நாளில், தமிழகத்தில் மட்டும் 17.75 கோடியும், உலகம் முழுவதும் 46 கோடி ரூபாயும் வசூலித்ததாக படத்தை தயாரித்த 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் படத்தை வெளியிட்ட அகிம்ஷா எண்டர்டெயின்மெண்ட், ரெட்ரோ 1.83 கோடி ரூபாய் முதல் வார வசூலாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்பின்னர் வசூல் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

டூரிஸ்ட் ஃபேமிலி : retro tourist family hit 3 who get high collection
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் சிம்ரன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், யோகிபாபு, பகவதி பெருமாள், குழந்தை நட்சத்திரம் கமலேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் சிறப்புக் காட்சி முதலே பாசிட்டிவான விமர்சனங்கள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்தன. இதனால் முதல்நாளை விடவும் அடுத்த மூன்று நாள்களில் வசூல் அதிகரித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி படத்தை வெளியிட்ட அகிம்ஷா எண்டர்டெயின்மெண்ட், டூரிஸ்ட் ஃபேமிலி முதல் வாரத்தில் வெளிநாடுகளில் மட்டும் ரூ.3.8 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வாக தெரிவித்துள்ளது.
பிரபல சினிமா விமர்சகரான ஸ்ரீதர்பிள்ளை, முதல் வாரத்தில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 12.2 கோடி வசூல் செய்துள்ளது என்றும், உலகளவில் சுமார் 18.7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹிட் 3 : retro tourist family hit 3 who get high collection
நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள ஹிட் 3 திரைப்படம் கடந்த 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 101 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தை தயாரித்த யுனானிமஸ் புரொடெக்சன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
இதுதவிர அஜய் தேவ்கனின் நடிப்பில் வெளியான ரெய்டு 2 முதல் வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.73 கோடி வசூல் செய்துள்ளதாக தரண் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.
