கம்போடியாவில் மோசடி வேலை… அதிரடியாக 67 இந்தியர்கள் மீட்பு!

Published On:

| By Kumaresan M

வெளிநாட்டில் வேலை, கை நிறைய சம்பளம் என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கொடுத்து இந்திய இளைஞர்கள் மற்றும் பெண்களை மயக்கி வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று இந்தியாவுக்கு எதிராகவே சைபர் க்ரைம்களில்  ஈடுபட வைத்த விவகாரத்தில்,  கம்போடியாவில் இருந்து ஆயிரம் இளைஞர்களை இதுவரை இந்தியா மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் 60 ஆயிரம் முதல் 6 லட்சம் வரை மாத சம்பளம் என்றும்  ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம். என்ஜீனியரிங், டேட்டா என்ட்ரி வேலைக்கு பிஇ கம்யூட்டர், டிப்ளமோ கம்யூட்டர் பட்டத்தாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பேஸ்புக் போன்ற சோசியல் மீடியாக்களில் முதலில் இந்த கும்பல்களின் ஏஜெண்டுகள்  விளம்பரம் செய்வார்கள்.

ADVERTISEMENT

இந்த கும்பலுக்கு ஏஜெண்டுகள் ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ளனர். இந்த ஏஜெண்டுகள் ஒரு இளைஞரை அனுப்பி வைத்தால் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பணம் கொடுக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து 25 ஆயிரம் பேர் வரை இந்த 3 நாடுகளுக்கும் சமீபத்தில் சென்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 500 பேர் வரை சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

சீனர்கள் பலர் கம்போடியா, லாவோஸ், மியான்மர் நாடுகளில் தீவு போன்ற தனிமையான இடங்களில் பத்து மாடி கட்டடங்களில் இந்த நிறுவனங்களை நடத்தி வருகின்றனர் .

ADVERTISEMENT

இந்த நிறுவனங்களில் இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீ லங்கா, நைஜீரியா, எத்தியோப்பியா, கம்போடியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு முதலில் ஒரு மாதம் பயிற்சி கொடுக்கிறார்கள். பெண்களிடம் ஆண்களை மயக்கும் விதத்தில் எப்படி பேசுவது… ஆண்களிடத்தில் பெண்களை மயக்குவது எப்படி என்று பலவிதங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வேலை செய்ய மறுத்தால், பயிற்சி பெற மறுத்தாலோ பயங்கரமான தண்டனை கொடுக்கிறார்கள். 10 மாடி கட்டடத்தில் மாடிப்படிகளை ஏற வைப்பது, தொடை மற்றும் கடுங்கால் வீங்கும் அளவுக்கு தோப்புக்கரணம் போட வைப்பது. மணி கணக்கில் முட்டிபோட வைப்பது, சுவரில் தலைகீழாக சாய்ந்து நிற்க வைப்பது, அவ்வளவு ஏன் கரண்ட் ஷாக் வரை கொடுப்பார்கள். இது போன்ற தண்டனைக்கு பயந்து இளைஞர்கள் வேலையை செய்ய தொடங்கி விடுவார்கள்.

ADVERTISEMENT

முதலில் இந்த இளைஞர்களிடத்தில் டிக் டாக், பேஸ்புக், ரீல்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில் இருந்து தொடர்பு எண்களை ஒரு பிரிவு சேகரித்து கொடுக்கும். அதோடு, இந்தியாவிலுள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடத்தில் இருந்தும்  ஆதார் கார்டு, போன் எண்களை எளிதாக சேகரித்து விடுகின்றனர்.

அந்த எண்களை தொடர்பு கொண்டு கேசினோ விளையாட்டுகளில் இவ்வளவு தொகை போட்டால் இவ்வளவு சம்பாதிக்கலாம் என மூளை சலவை செய்து பணம் பறிப்பார்கள். யாராவது ஒருவர் Gpay எண்ணுக்கு வேண்டுமென்றே பணம் போட்டுவிட்டு, தவறுதலாக பணம் போட்டுட்டேன் அதை திருப்பி அனுப்புங்கள் என்று மிரட்டுவார்கள் அசிங்கமாக பேசுவார்கள், பயந்து போய் பணத்தை திரும்ப போட்டால் பணம் அனுப்பியவர் கணக்கிலிருக்கும் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுவார்கள்.

பெண்களின் அரைகுறை படங்களை பகிர்ந்து … தொடர்பு எண் கொடுப்பார்கள். சலன புத்தியுள்ளவர்கள் மயங்கினால் அட்வான்ஸ் பணம் போட சொல்வார்கள். அல்லது காதலிப்பது போல் காதலித்து அவசர செலவுக்கு பணம் போடச் கூறுவார்கள். பணம் போட்டதும், அந்த சிம்கார்டை கழற்றி தூக்கிப் போட்டு விடுவார்கள். பெண்களை எடுத்து கொண்டால், 35 வயதுக்கு மேலுள்ள குடும்ப பெண்கள் இவர்களின் முக்கிய டார்கெட்டாக இருக்கிறார்கள்.

இந்த பெண்கள் பொருளாதார ரீதியாக ஸ்டாங்காக இருப்பார்கள், கணவரின் அன்புக்கு ஏங்கக் கூடியவர்களாக இருப்பார்கள். கணவரிடம் அதிருப்தியில் இருப்பவர்களை கண்டுபிடித்து அன்பாக பேசுவது போல பேசி மயக்கி விடுவார்கள். முதலில் மிஸ்டு கால்தான் இவர்களிடத்தில் இருந்து வரும். பின்னர், படிப்படியாக பேசி பழகி மயக்கி விடுவார்கள். ஒரு கட்டத்தில் பணத்தை பறித்து கொண்டு சிம்கார்டை கழற்றி எரிந்து விடுவார்கள்.

இந்த நிலையில், கம்போடியாவில் இப்படிப்பட்ட மோசடி வேலையில் இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது. மோசடி வேலையில் இருந்து இன்று 67 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதோடு, 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 1000 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 லெபனான் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்… உயரும் பலி எண்ணிக்கை!

நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சை கருத்து : தெலங்கானா பெண் அமைச்சருக்கு குவியும் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share