அண்ணாமலை மிகச்சிறந்த அறிவாளி என்றும், அவர் எல்லா டேட்டாவையும் கையில் வைத்திருக்கிறார் என்றும் புதிய தலைமுறை டிவி நிறுவனர் பச்சமுத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 4ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்த போது, “பல்வேறு குற்றச்சாட்டுகளை நீங்கள் வைத்து வருகிறீர்கள். ஆனால் எந்த ஆதாரத்தையும் இதுவரை வெளியிடவில்லை” என்று புதிய தலைமுறை செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இதனால் கடும் கோபமடைந்த அண்ணாமலை, என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதை நான் தருவேன். ஆனால் அரைமணி நேரம் அதை ஒளிபரப்பவேண்டும் என்று சவால் விடுத்தார்.
அதோடு தன்னுடைய அறைக்கு புதிய தலைமுறை செய்தியாளரை அழைத்துப் பேசிய போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.
இதையடுத்து பாஜக நிர்வாகிகள் புதிய தலைமுறை செய்தியாளரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கின்றனர்.
இதற்குச் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் ஐஜேகே கட்சித் தலைவரும், புதிய தலைமுறை டிவி நிறுவனருமான பச்சமுத்து அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார். அதை தமிழ்நாடு பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
பச்சமுத்து பேசுகையில், “நிருபர்களும் கொஞ்சம் சூழ்நிலையை அனுசரித்துப் போக வேண்டும். அவர் சின்ன வயதில் பெரிய பதவிக்கு வந்திருக்கிறார். அவர் மிகப்பெரிய அறிவாளி.
அவர் இல்லை என்றால், இன்றைக்கு எதிர்க்கட்சியே இல்லாமல் போயிருக்கும்,. திறமையானவர். ஐபிஎஸ் வரை படிக்க வேண்டும் என்றால் சாதாரண விஷயம் அல்ல.
கையில் அத்தனை டேட்டாவும் வைத்திருக்கிறார்.. எல்லா வரலாறுகளையும் கையில் வைத்திருக்கிறார். எந்த கேள்விக்கும் பதில் சொல்கிறார். அப்படி அவர் பதில் சொல்லும்போது, அத்தனை டிவி காரர்களும் வந்து சத்தம் போடுகிறார்கள்.
அவருடைய சூழ்நிலையில், அவரது கட்சியில் தற்போது சில பிரச்சினைகள் இருக்கிறது. அதனால் அவர் சிரமத்தில் இருக்கிறார். இந்த நேரத்தில் அவரிடம் போட்டி போட்டுக்கொண்டு கேட்பது முறையல்ல.
தமிழகத்துக்குத் தேவையான சிறந்த தலைவர் பாஜகவில் இப்போது இருக்கிறார். அதனால் அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பு என்பது நாங்களே எதிர்பாராத ஒன்றுதான்” என்று கூறினார்.
பிரியா
மாணவிக்கு காதல் கடிதம்: ஆசிரியர் சஸ்பெண்ட்!
அமைச்சருடனான பேச்சு வார்த்தை தோல்வி: தொடரும் செவிலியர்கள் போராட்டம்!
Comments are closed.